போகர் சப்தகாண்டம் 2171 - 2175 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2171 - 2175 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2171. தானான நிஷ்டையிலே யிருந்துகொண்டு சதாநிஷ்டை ருத்திரநிஷ்டை மாலிநிஷ்டை
கோனான மஹேஸ்பரியின்நிஷ்டை தானும் குறிப்பான பிர்மநிஷ்டைதானோடொக்க
வேனாகயிருந்துகொண்டு சதாகாலந்தான் விருப்பமுடன் ரேசகபூரகமுஞ்செய்து
மானாக்கும் பகத்திலிருந்துகொண்டு மார்க்கமுடன் மூலமதையழுத்திப்பாரே

விளக்கவுரை :


2172. அழுத்தியே கமலமதிலிருந்துகொண்டு அப்பனே பிரம்மத்தைக்காணலாகும்
வழுத்தவே குண்டலியில் மூலந்தாக்கி வாகுடனே பிரம்மத்தை நிஷ்டைகொள்ளு
தொழுகமாலினுட நிஷ்டையப்பா தோறாமல் வஷ்டாங்கம் செய்துகொண்டு
விழுகவே கும்பகத்தில் வாசிபூட்டி விஷ்ணுவை சதாகாலம் காணலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

2173. காணவென்றால் வஷ்டருத்தஇரத்தைக்கேளு கருவான பூரகத்தைக் கும்பகத்தில்மாட்டி
தோணவே வனாகதத்தில் வாசிபூட்டி தொழுதுமே ருத்திரரை கண்டுபூசி
வீணவே சகலபாக்யமும்பெற்று விண்ணிலே வலதுகாலை தூக்கிமைந்தா
கோணவே பாதத்தை நிலத்தில்தாக்கி குப்புரவாய்க் கீழேநோக்கி
மாணவே விசுத்தியிலே இருந்துகொண்டு மாணிலத்தில் மகிபலைவாழலாமே

விளக்கவுரை :


2174. வாழலாம் மஹேஸ்பரணார் பாதங்கண்டு வகுப்புடனே நிஷ்டைவந்து மதிறமாய்த்தொட்டு
வீழலாம் சதாசிவத்தின் நிஷ்டைதன்னை விருப்பமுடன் கண்டறிந்து விழல்போகாமல்
தாழவே யோகதண்டைக் கையிலேந்தி தளமுடனே விபூதிதன்னைத் தளமாய்ப்பூசி
மாழவே சதாசிவத்தைப் பணிந்துபோற்றி மயங்காமல் மனோன்மணியைத் தொழுதுநில்லே

விளக்கவுரை :


2175. நிற்கையிலே மனோன்மணியாள் அமுர்தமீவாள் நிகறானவமுர்தமது கொண்டபோது
துற்கையுடன் காளிமுதல் நடுங்குவார்கள் துடியான தேகமது கற்றூணாகும்
சற்பனைகள் மிகடனே வதிகமாகி சதாகாலம் பூரணத்தில் லகித்துநின்று
உற்பனமாம் மதியமுர்த லேகியத்தை வுண்டுமல்லோ சதாநிஷ்டைப் பணிகுவாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar