போகர் சப்தகாண்டம் 2181 - 2185 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2181 - 2185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2181. தரமான பூரமது ஒன்றேயாகும் தாக்கான வெல்லமது ரண்டேயாகும்
காமான எருக்கன்பால் தன்னாலாட்டி கரிவாகமைபோல யாட்டிமைந்தா
வேமான கற்புடைய மாதுக்கீய வெளியாகும் ஐந்துமாத கற்பந்தானும்
சாமான மின்றி வல்லாரைதன்னில் சட்டமுட னிக்கருவைப் போட்டிடாயே

விளக்கவுரை :


2182. போடவே கல்வமதில் இட்டுமைந்தா பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீடவே தானரைத்து வானபின்பு நினைவாகப் பரணிதனிலடைத்துக்கொண்டு
கூடவே குழிவெட்டி பூமிதன்னில் குடிலமுடன் தான்புதைத்து பின்புகேளு
ஆடவே மண்டலங்கள் சென்றுதானால் அப்பவல்லோ காயாதிகற்பமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

2183. ஆச்சென்று விடுகாதே மைந்தாகேளு அப்பனே மதியமுர்தம் கொண்டாயானால்
மூச்சடங்கி தன்னிலையைக் காணலாகும் முயலான பூரணத்தை நன்னலாகும்
பேச்சென்ற சத்திசிவங் காணலாகும் பேரான சிவபூசை அறியலாகும்
பாச்சென்ற சத்திசிவங் காணலாகும் பராபரத்தின் சின்மயத்தின் பற்றநன்றே

விளக்கவுரை :


2184. நன்றான பேரொளியைக்காணலாகும் நாதாந்தத் திறவுகோல் காணலாகும்
குன்றான வேதாந்தக் கற்பமெல்லாம் கோடிக்குகோடிவரை காணலாகும்
தன்றான செங்கடுக்காய் சேர்தானப்பா தயவுடனே தானிடித்து சார்தானீக்க
வென்றான பாகமிது பத்துமுறைதானும் விரும்பியே தானிடித்து சூரணங்கள்செய்யே

விளக்கவுரை :


2185. செய்யவே சூரணத்தை எடுத்துமைந்தா தினம்போது காடியினாலரைத்துமேதான்
பையவே குன்றியிடை யுண்டுவந்தால் காலனுக்கிடமேது சாவுமேது
நொய்யவே தேகமது கற்றூணாகும் நோக்காடுவாராது நுணுக்கமெத்த
மெய்யவே காலாங்கிநாயர்பாதம் விருப்பமுடன் தான்பணிந்து விளம்பிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar