போகர் சப்தகாண்டம் 2186 - 2190 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2186 - 2190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2186. விளம்பிட்டேன் கைபாகம் செய்பாகம்தான் வித்தியாசங்களது மிகவாராமல்
குளம்பிட்ட நூல்களெல்லா மிகவாராய்ந்து குறிப்புடனே கண்டறிந்த கலையுமாகும்
தளம்பிட்ட சதாநூலும் பார்த்தாலென்ன சாங்கமுடன் காணுபவன் யோகவானாம்
அளம்பிட்ட இதிகாச வித்தையெல்லாம் அறிபவனே லோகத்தில் சித்தனாச்சே

விளக்கவுரை :


2187. சித்தனாய்ப் பிறந்தாலும் கீர்த்தியுண்டு தேசத்தில் வெகுபேர்கள் மெச்சுமாண்பன்
பத்தனாய்ப் பிறந்தாலும் பதவியுண்டு பாருலகில் தனவானாய் வாழலாகும்
பித்தனாய்ப் பிறந்தாலும் ஒன்றுங்காணான் பேசறிய மாட்டாத புலவனாவான்
எத்தனைதான் கற்றாலும் என்னலாபம் நீடூழி சமாதியிலே இருக்கநன்றே

விளக்கவுரை :

[ads-post]

2188. நன்றான யின்னமொரு மார்க்கம்பாரு நலமான கரிவங்கம் சேர்தானப்பா
பன்றான தகடாக்கி செப்பக்கேளு பாங்கான ஆவாரை பஞ்சாங்கந்தான்
குன்றான சரக்கதுவைக் குடுவைக்குள்ளே குணமுடனே தான்போட்டு தகடைவைத்து
அன்றான பொடிமேலே தகடைவைத்து அப்பனே வதின்மேலே பொடியைப்போடே

விளக்கவுரை :


2189. போடையிலே கீழ்மேலும் பொடியைப்போட்டுப் புகழாகத்தான்போட்டுச் சீலைசெய்து
நீடவே கெஜமான குழியைவெட்டி நினைவாகப்புடம்போடக் கரிவங்கந்தான்
கூடாதே வெந்ததுவும் கரடுமாகி குடிலமுடன் பற்பமது சோளம்போலாம்
பாடவே யிப்படியே பத்துபுடம்போடு பாங்கான பற்பமது தவளமாச்சே

விளக்கவுரை :


2190. ஆச்சப்பா பற்பத்தை எடுத்துக்கொண்டு அப்பனே பொரித்தண்டம் சிற்றண்டந்தான்
நீச்சப்பா சரியாக எடுத்துக்கொண்டு நினைவாக வெண்கருவால் தன்னாலாட்டி
மாச்சலன்றி சிறுபில்லையாகதட்டி மதிப்புடனே ரவிதனிலே காயவைத்து
தீய்ச்சலென்ற கயுவோட்டிலிட்டுமைந்தா திறமுடனே கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar