போகர் சப்தகாண்டம் 2191 - 2195 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2191 - 2195 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2191. போடவே பற்பமது காரமேறிப் புகழான வெண்மைநிறம் புகலப்போமோ
கூடவே பத்துமுறை இப்படியேபோடு குணமான பற்பமது கூறப்போமோ
நீடவே பற்பத்தை அனுபானத்தில் நேர்மையுடன் தானருந்த மேகமெல்லாம்
ஓடவே கடல்போகுமென்று சொல்லுவுத்தமனே போகரிஷிபுகன்றவாறே

விளக்கவுரை :


2192. வாறான கயரோகம் சயரோகங்கள் வாகுடனே கிரந்திமுதல் காணாதோடும்
கூறான பாண்டுடனே வீக்கம்போகும் பொல்லாத சயரோகம் காணாமல்போகும்
நேறான பவுத்திரங்கள் முளைமூலங்கள் நெடிதான கிரந்திமுதல் சண்ணலாகும்
சேறான வெள்ளையொடு சிலவிஷங்கள் சீறியேபோடுமடாதிண்ணந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2193. திண்ணமா மின்னமொரு பாகங்கேளு தெளிவாக கல்லுப்பு படிதானொன்று
வண்ணமுடன் புளியாரை சாற்றினாலே வளமையுடன் தானரைப்பாய் நாலுசாமம்
கண்ணமுடன் பில்லைதட்டிக் காயவைத்து கருத்துடனே ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
நண்ணமுடன் பத்தெருவில் புடத்தைப்போடு நாதாந்தத் தாயெனக்கு சொன்னவாறே

விளக்கவுரை :


2194. சொன்னபடி யப்படியஏயரைத்துமைந்தா சுத்தமுடன் ரவியிலிட்டுக் காயவைத்து
நன்னயமாய் சீலைசெய்து புடத்தைப்போடு நலம்பெறவே வைந்துபத்து விப்படியே போடு
முன்னுரைத்த பாகமது பிசகிடாமல் முனையான வுப்பதுவும் சிவக்குமட்டும்
பன்னவே புடம்போடச் செந்தூரிக்கும் பாலகனே செந்தூரம் பதனம்பண்ணே

விளக்கவுரை :


2195. பண்ணியே சரக்கொன்றைப் பூவினாலே பாங்குடனே கெந்தகத்தை யரைத்துமேதான்
நண்ணமுடன் தானரைப்பாய் நாலுசாமம் நலமுடனே வுண்டையது புன்னைக்காய்ப்போம்
தண்ணமுடன் தோண்டியிட்டு துவாரமிட்டு சட்டமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
எண்ணியே நூறெருவில் குழித்தயிலமப்பா யெழிலாக வாங்கிடவே எண்ணையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar