போகர் சப்தகாண்டம் 2206 - 2210 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2206 - 2210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2206. சில்லுதனை எடுத்துமிகப் பூட்டிபார்க்கச் சிறக்காலே மறைகொண்டுதிருவல்பூட்டி
பல்லுடனே சக்கரத்தில் திருவுபூண்டு பக்கமிருபுறமுமட்டும் குழைகள்விட்டு
மல்லுடனே மல்லணிந்து குழைசிபோட்டு மல்லினது மேற்புரத்தில் குழைகள்நிற்க
தெல்லுபோல் தகடதனை வுருளைசெய்து தேர்வட்டம் போலாகத்தெரியபூட்டே

விளக்கவுரை :


2207. பூட்டுகையில் வில்லாணி கள்ளாணியப்பா புகழான நடுசட்டம் திருகுசட்டந்தானும்
தாட்டிகமாய் கயிர்போலத் திருகுகம்பிமாட்டி சட்டங்களில் மூன்றுவட்டபிறை போலுண்டாக்கி
நீட்டமுள்ள கெஜநூறு வண்டிரதம்போல நெடிதான சட்டமது வளவுடனேமாட்டு
காட்டவே வகலமது கெஜமுப்பதாகும் கருணையுடன் அங்குலங்கள் வரைதப்பாமாட்டே

விளக்கவுரை :

[ads-post]

2208. தப்பாமல் மாட்டையிலே தேர்கொண்ட சூட்சம் தாரணியில்போகுதற்கு சட்டமுடன்கூட்டு
ஒப்பமுடன் காலில் ஒருபக்கமிகவாணி ஓங்குபுகழாணிலே திருவல்மாட்டி
செப்பமுட னடிவாரக்குழைதனிலே சில்லு சீராகத்தானமைத்துக் கழுத்துக்கட்டைமாட்டி
நெப்பமுடன் சிம்மாடுகட்டைதன்னில் மத்திநேராக திருவலது சொருவல்மிகப்பூணே

விளக்கவுரை :


2209. பூணவே நெடுங்கம்பி யாறுவகைச்சட்டம் பூட்டியதோர் கம்பிகளில் ஆறுவகைக்குறுக்கு
தேணவே மேற்புரமும் அடிப்புரமுமப்பா துப்புரவாம் நடுக்குழலில் இருபக்கமடைத்து
காணவே வாயுவென்ற காற்றதுவுமொடுங்கி கடையாணி சுழலாணி
சுள்ளாணி முடுக்கிமாணவே பின்பக்கம்சட்டிகுழல்வைத்து வதிப்புடனே கொப்பரைபோல் உருளைசெய்யே

விளக்கவுரை :


2210. செய்யவே கொப்பறையில் வக்கினியும்நிற்க சோரவேவப்புவென்ற கொப்பறையின்பக்கம்
உய்யவே சகலமதுவும் ஆவியோடொக்க வுற்பனமாம் வாவியது மேற்நோக்கிப்பாய
எய்யவே கணையாதே நெருப்பதனைமாட்ட எழிலான வுள்ளாவிகொண்டு 
பய்யவே சலமிருக்கும் இடந்தனிலே பரவிபறக்குமே முன்குழலில் பரவிமிகப்போமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar