போகர் சப்தகாண்டம் 2216 - 2220 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2216 - 2220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2216. இறங்கினேன் ராசரிட சமாதிகண்டேன் எழிலான ஏசுவிறன் சீஷர்கண்டேன்
சுறமுடன் இம்மான்வேல்சமாதிகண்டேன் சுத்தனாம் பரிசுத்தர் சமாதிகண்டேன்
வரங்கொடுக்கு மிசுரவேல் சமாதிகண்டேன் வளமுடனே ரோமபுரி தேசத்தார்கள்
திறமுடனே ரோமபுரி கோட்டைக்குள்ளே போகுவதும் வருவதுங்கண்டேன்தானே

விளக்கவுரை :


2217. கண்டேனே கோட்டைவழி சென்றபோது கடுங்காளை யாயிரம்பேர் சூரரப்பா
தெண்டமுடன் யேசுவின்தன் பாதம்போற்றி தெளிவுடனே ஞானவுபதேசம் சொல்வார்
பண்டிதங்கள் அதிவிசேஷமனைத்துமுண்டு பனிரண்டு சீஷவர்க்கசமாதியுண்டு
மண்டலத்தில் தானிருக்கும் யேசுதன்னை வணக்கமுடன் வரங்கேட்பார் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

2218. கோடிபேர் சமாதிநிலை தன்னைக்கண்டேன் கொற்றவனாம் ரோமபுரி சமாதியோரம்
தேடியே பார்க்கவென்று போகும்போது தேர்வேந்தராசரப்பா யிசுரவேலர்
நாடியே தபசிகளாயிரம்பேர் நலமுடனே சமாதியது லக்கோயில்லை 
கூடியே பார்க்கையிலே வினோதமெத்தக் கூறவே முடியாது திண்ணமாமே

விளக்கவுரை :


2219. திண்ணமாம் எழுபத்து தேசங்கண்டேன் திடமுள்ள மாதாவின் தேசம்போனேன்
வண்ணமுடன் யூதாவில் கோடானுகோடி வனந்தனிலே ரிஷிகளப்பா சொல்லொண்ணாதே
என்னவே யேசுவின்தன் மகிமைமெத்த எடுத்துரைத்தார் சீஷர்வர்க்க மனேகம்பேர்
சண்ணலுடன் மலையெல்லாம் சுத்திவந்தேன் சாங்கமுடன் யீசர்க்கு சமாதியுண்டே

விளக்கவுரை :


2220. உண்டான சமாதியிடம் போயிருந்தேன் ஓகோகோ நாதாக்கள் சீஷவர்க்கம்
கண்டேனே வெகுகோடி வதிசயங்கள் கலியுகத்தில் கண்டதில்லை யிதுபோலப்பா
தண்டவனந்தான் தாண்டிசுத்திவந்தேன் சகலான சீனபதிமார்க்கத்தாரை
கொண்டுமல்லோ வவரவர்கள் தேசம்விட்டுக் கொப்பனவே திரும்பிவந்தேன் சீனந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar