போகர் சப்தகாண்டம் 2231 - 2235 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2231 - 2235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2231. கண்டிலேன் நபிநாயந்தன்னைக்காணேன் காதிலே வதரிரிவாக்குண்டாச்சு
அண்டர்முனி ராட்சதர்கள் திடுக்கிட்டேங்க அவனியெல்லாந்தான் நடுங்க சப்தமாச்சு
தொண்டர்களெல்லாங்கூடி யுத்தாலாவை தொழுதுமே பணிந்திட்டார் அந்தநேரம்
தெண்டனிடும்போதையிலே மலுங்குகூட்டத் துணையாக யானுமொரு மலுங்கானேனே

விளக்கவுரை :


2232. மலுங்காகத் தானிருந்தேன் வலதுகாலம் மானபியைக்காணவென்று எண்ணங் கொண்டேன்
கலுங்கபத்தி முதலான சீஷவர்க்கம் காரைகாணார் கோடிமன்னர் காணியீவார்
பலுங்குடனே பனிரண்டு வாண்டுவாண்டு பாரினிலே சமாதியின்றன் சத்தமுண்டு
பலுங்கையுட சத்தமது சதாகாலந்தான் பாலிக்குமெந்நாளும் பண்பதாமே

விளக்கவுரை :

[ads-post]

2233. பண்பான செய்தியல்லோ கண்டறிந்தேன் பட்சமுடன் நபிநாயந்தன்னைக்காணேன்
கண்பான சமாதியிலே மகிமைமெத்த காட்சியுடன் காணுவது மிகவுமாச்சு
நண்பான நபிக்கூட்டம் கோடிகாவல் நலமான சமாதியிலே இருப்பாரப்பா 
திண்பான முகமது மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே கோடிபேரே

விளக்கவுரை :


2234. கோடியாம் யணியணியாய் பார்த்து வந்தேன் கூறவேபோகாது குவலயத்தில்
தேடியே திரிந்தாலும் மக்காவைப்போல் ஜகத்திலே வதீதமுள்ள தேசமுண்டோ
நீடியே மகிமைகளும நேகமுண்டு நீனிலத்தில் யான்சென்றேன் தேசமெல்லாம்
பாடியே குளிகையது பூண்டுகொண்டு பாரெல்லாம் சுத்திவந்தேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


2235. தானேதான் சீனபதிபோகவென்று தாழ்ச்சியுடன் உத்தாரங்கேட்டபோது
மானேதான் பக்கிரியாக்கோபுதானும் மகாதீட்சை பெறுகவென்று வணங்கியென்னை
தேனான காலாங்கிபாதங்காண தெளிவுடனே எந்தனுக்கு வரமுமீவாய்
பானான கமலமுனி தன்னைக்காண பட்சமுடனிருப்பிடமும் செப்பிடீரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar