போகர் சப்தகாண்டம் 2241 - 2245 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2241 - 2245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2241. சபிப்பாரே பக்குவமாய் நடந்துகொள்ளு சதாகாலம் அவர்களிடம் பூசித்தேதான்
அபிமானம் தான்வரவே நடந்துகொள்ளு அப்போதே யுன்மீதில் கிருபைவைத்து
நபியுடைய மகிமைதனைப் பற்றியேதான் நாதாக்கள் மரியாதை செய்வாரப்பா
கபிலமுனி நெடுங்காலம் இங்கேவந்தார் கண்டல்லோ சித்தர்களுஞ் சபித்திட்டாரே

விளக்கவுரை :


2242. இட்டாரே சித்தர்முனி ரிஷிகள்தாமு மிடையூறு பேசினதோர் தர்க்கத்தாலே 
கெட்டாரே கமலமுனி கல்லாய்ப்போனார் கொடியுடனே சித்தர்களுஞ் சமைத்தாரங்கே
கிட்டிருந்து மரியாதி யாவும்பெற்றக் கிருபையுடன் மக்காவுக்கேகுமென்றார்
சட்டமுனி முதலானோரிங்குவந்து சாங்கமுட னுபதேச மடைந்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2243. பாரேதான் போகரிட தீரம்வேண்டும் பண்பான விட்டகுறை நேசம்வேண்டும்
சீரேதான் காலாங்கி பட்சம்வேண்டும் சிறந்தமுனி பலபேர்கள் கிருபைவேண்டும்
நேரேதான் குளிகையது பூணவேண்டும் நீனிலத்தில் பெருமையது கீர்த்திவேண்டும்
மேரேதான் கண்ணபிரான் அருளும்வேண்டும் இல்லாட்டால் அவனியிலே வெல்லார்தாமே

விளக்கவுரை :


2244. வெல்லார்க்களென்றுசொல்லி யாசீர்மித்து விதவிதமாய் வேணதெல்லாம் தாமுரைத்து
சொல்லாது மிகச்சொல்லி சுரூபஞ்சொல்லி துரையுடனே முறையோடு கதையுஞ்சொல்லி
வல்லான காலாங்கிநாயர்பாதம் வணங்கியே எப்போது மனதிலெண்ணி
மெல்லவே யுந்தனிட பதியைத்தேடி மேன்மையுடன் போகவென்று வரந்தந்தாரே

விளக்கவுரை :


2245. தந்தவுடன் பக்கிரியாக்கோபுதானும் சார்புடனே தன்பதிக்குப்போனாரங்கே
அந்தமுடன் காலாங்கி தாள்வணங்கி அப்பனே சீனபதிவிட்டுயானும்
விந்தமுடன் அதிசயங்காண வெளிப்பட்டேன் சீனபதிதன்னைவிட்டு
சொந்தமுடன் மேருவுக்கு கடைபாகத்தில் சூரியனார் தாமிருக்கு மிடங்கண்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar