போகர் சப்தகாண்டம் 2246 - 2250 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2246 - 2250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2246. கண்டேனே வனந்தனிலே மகிமைமெத்த கண்டவர்கள் விண்டவர்களாருமில்லை
அண்டமுனி ராட்சதர்கள் அசுராள் கூட்டம் அணியணியாய் எதிர்வந்து சூழ்ந்துகொண்டார்
தண்டவனந்தன்னிலே யான்குளிகைகொண்டு தரணியிலிறங்கியதைப் பார்த்தாரங்கே
கொண்டல் வண்ண னேகர்கள் கர்ச்சிப்பாலே கோடானகோடி வதிசயங்கண்டேனே  

விளக்கவுரை :


2247. அதிசயங்கள் மெத்தவுண்டு அங்கேதானும் அப்பனே அசுராக்கள் கூட்டமப்பா
பதியைவிட்டு பதிதேடி வந்தவன்யார் பாதகனாயிருக்கிறான் என்றுசொல்லி
துரிதமுடன் எந்தனிட கிட்டவந்து துப்புரவாய் யாரென்று வினவிக்கேட்க
கரிதமுள்ள போகரிஷி யடியேன்தானும் கலங்கியே திடுக்கிட்டு நின்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

2248. நின்றேனே கிடுகிடுத்து பயந்துயேங்கி நெடுமூச்சு தானெரிந்து பயமுமுற்று
குன்றருகே நின்றுவிட்டேன் அடியேன்தானும் கூச்சலுடன் அசுராக்கள் கிட்டியேதான்
சென்றுமே யெனையெடுத்து விழுங்கவந்தார் சோறாமல் யானுமல்லோ வார்த்தைபேசி
வென்றுமே காலாங்கி நாயர்பாதம் விருப்பமுடன் தாள்வணங்கி பணிந்திட்டேனே

விளக்கவுரை :


2249. பணிந்தேனே எந்தனுக்கு பட்சம்வைத்து பாரிலுள்ளவினோதமெல்லாம் காண்பித்தார்கள்
துணிவுடனே சூரியனினி வனங்களெல்லாம் சுத்தியே வலசாரியாக வந்தேன்
அணிபெறவே யாளியுட வனமுங்கண்டேன்
கணிதமுடன் பூமிமுதல் அமுனையுங்கண்டேன் காலாங்கி நாதருட கடாட்சந்தானே

விளக்கவுரை :


2250. தானான வின்னமொரு மார்க்கம்பாரு தாக்கான தாதுபுஷ்டி குளிகைகேளும்
வேனான பேரீச்சங்காய்தான்சேரு மிக்கான ஊமத்தின் விரைதான்சேரு   
பானான கஞ்சாவின் விரைதான் சேரு பாங்கான மாதுளையின் விரைதான்சேரு
தேனான கொமட்டிவிரை சேர்தானப்பா தெளிவான வத்திவிரை சேர்தானொன்றே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar