போகர் சப்தகாண்டம் 2251 - 2255 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2251 - 2255 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2251. ஒன்றான விரையுடனே யத்திவித்து ஒளியான ஆவின்தன் வித்துவாகும்
நன்றான துத்தியுட வித்துவாகும் நலமான சூரியிட வித்துமாகும்
தன்றான ஆவாரை வித்துவாகும் தாக்கான வெட்பாலை வித்துவாகும்
பன்றான கார்போக வித்துவாகும் பாங்கான வாதுமையின் வித்துமாமே

விளக்கவுரை :


2252. அமேதான் காரையுட வித்துவாகும் அப்பனே கொன்றையிட வித்துவாகும்
தாமேதான் புரசையிட வித்துவாகும் தயவான கொத்தமல்லி வித்துவாகும்
வேமேதான் நீர்முள்ளி வித்துவாகும் வியர்வான சூரையிட வித்துவாகும்
காமேதான் பூனையிட வித்துவாகும் கறுப்பான பாளையிட வித்துமாமே

விளக்கவுரை :

[ads-post]

2253. வித்தான வெள்ளரியின் வித்துமாகும் விதமான காசிலியின் வித்துமாகும்
சத்தஅன வரைக்கீரை வித்துமாகும் சார்பான குலாமல்லி வித்துமாகும்
சுத்தான வாலையின்தன் வித்துமாகும் சுடரென்ற தாய்ப்பாகல் வித்துமாகும்
சித்தான தேற்றானின் வித்துமாகும் சிறப்பான கருங்கொள்ளு வித்துமாமே

விளக்கவுரை :


2254. தானான பூசனியின் வித்துமாகும் தனியான எட்டியின்தன் வித்துமாகும்
பானான முருங்கையிட வித்துமாகும் பாகான முள்ளங்கி வித்துமாகும்
கோனான வரசினுட வித்துமாகும் குணமான சோகியிட வித்துமாகும்
தேனான தாமரையின் வித்துமாகும் தெளிவான வழிஞ்சியிட வித்துபாரே

விளக்கவுரை :


2255. பாரேதான் சாரத்தின் பருப்புகூட்டி பாங்கான கசகசாதானுங்கூட்டி
நேரேதான் சாதிக்காய் சாதிபத்ரி நேர்பான வால்மிளகு சுக்கோடேலம்
சாரேதான் கிறாம்புடனே மிளகுகூட சார்பான லவங்கமென்ற பட்டைதானும்
வேர்பான பூமிசர்க்கரையின்மூலம் விரைவான மராட்டியென்ற மொக்குமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar