போகர் சப்தகாண்டம் 2256 - 2260 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2256 - 2260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2256. மொக்கான கருவேலம் பிசினியாகும் முனையான வெள்வேலம் பிசினியாகும்
தாக்கான சாலன்றன் பிசினியாகும் தகையான முருங்கையிட பிசினியாகும்
செக்கான மாங்கனியின் பிசினியாகும் சிறப்பான வத்தியின்றன் பிசினியாகும்
சுக்கான விசுக்கோலின் பிசினியாகும் சுகமான வாலன் பிசினியாமே

விளக்கவுரை :


2257. பிசினுடனே கருங்காலி பிசினியாகும் பிசகில்லா பூதத்தின் பிசினியாகும்
நசிதமுள்ள குங்குமத்தின் பிசினியாகும் நலமான காட்டத்தி பிசினியாகும்
உசிதமுள்ள பலாமரத்தின் பிசினியாகும் உத்தமனே ஊஞ்சனுட பிசினியாகும்
கசிதமுள்ள விலாவினுட பிசினியாகும் கருவான கசகசாபிசினுங்காணே

விளக்கவுரை :

[ads-post]

2258. காணவே பூவினுட மார்க்கம்பாரு கருவான முருங்கையுட பூவுமாகும்
தோணவே யாவாரைப் பூவுமாகும் துறையான தென்னம்பூ சாமந்திப்பூ
மாணவே மல்லியிட பூவுமாகும் மகத்தான விலாவினுட பூவுமாகும்
சாணவே தாழையுட பூவுமாகும் சார்பான தாமரையின் பூவுமாமே

விளக்கவுரை :


2259. ஆமேதான் விலாமிச்சு பூவுமாகும் அப்பனே மாதுளையின் பூவுமாகும்
வேமேதான் வேம்பினுட பூவுமாகும் கடிதான செவ்வல்லி பூவுமாகும்
நாமேதான் பூவகையின் ரசமுஞ்சொன்னோம் நலமான செம்பூரான் பூவுதாமே

விளக்கவுரை :


2260. தரமான மூலவகை சாற்றக்கேளு தாக்கான தண்ணீர்மிட்டான் கிழங்குதானும்
காமான பனையினுட மூலமாகும் கருவான கரும்பினுட மூலமாகும்
சாமான செந்தொட்டி வேரினோடு சார்பான கருந்துளசி வேருமாகும்
வேமான யிம்பூரா வேருமாகும் மிக்கான செமஃபாளை வேருமாமே

விளக்கவுரை :

போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar