போகர் சப்தகாண்டம் 2261 - 2265 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2261 - 2265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2261. வேறான மாமிஷமா மடைக்கலந்தான் வேகமுள்ள வுடும்பு முயல்கலைதானாகும்
வாறான முட்பன்றி மயிலுமாகும் வாகான செம்புரவி வாண்குறியுமாகும் 
தூரான காடைகவுதாரியாகும் துறைமேயும் கொக்குடனே புறாவுமாகும்
தாராவாம் பெட்டையுடன் செஞ்சேவல்தானும் சாதாவாம் குறும்பாட்டு யிறைச்சிபாரே

விளக்கவுரை :


2262. இறைச்சியாம் விலங்குடனே யித்தனையுங்கூட்டி எழிலாக வெயிலிலுலர்த்தி சூரணித்து
முறையுடனே ஒவ்வொன்றில் சேர்தானப்பா முயற்சியுடன் தானெடுத்து சேர்க்கக்கேளு
குறையாமல் முன்சொன்ன சரக்கையெல்லாம் கூட்டுமுறை தப்பாமல் ஒன்றுகூட்டி
நிறையுடனே ரசவகையுந் தப்பாவண்ணம் நினைவுடனே நெய்தேனிற் கிண்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2263. கிண்டையிலே சர்க்கரையுஞ் சரியாய்ச் சேர்த்து கிருபையுடன் மெழுகுபதந்தனிலிறக்கி
பண்டிதமாய் நெய்தேனும் கூடக்கூட்டிப் பாகமுடன் தானிறக்கி குளிகைசெய்து
கண்டிதமாய் மண்டலந்தானந்திசந்தி கருவாகத் தின்றுமல்லோ கூடும்போது
வண்டினம் போல்கலவியது மிகுதியாகி மங்கையரும் மானிலத்தில் நடுங்குவாரே

விளக்கவுரை :


2264. நடுங்குவார் மானிலத்தில் பெண்களெல்லாம் நாணுவார் புருஷாலைக்கண்டபோது
கடுஞ்சோப மதிகமுடன் காதல்கொண்டு கர்ச்சனைமிக வுண்டாய்கதிப்புகொண்டு
விடுமானும் கலையுடனே கலந்தமான்போல் விடாய்பட்டு மன்மதன்போல் காதல்பூண்டு
தொடுமாதர் நான்குவித சாதியோரை தோறாமல் அனுபவித்து பெயர்கொள்வீரே

விளக்கவுரை :


2265. கொள்ளவென்றால் பத்தியங்கள் இல்லையப்பா குணமுடனே வண்மையுள்ள பதார்த்தமெல்லாம்
தள்ளவே போகாது சதாகாலந்தான் தாரணியிலுண்டவருக்கு பலமேழானை
விள்ளவே யுண்டாகும் குளிகையப்பா விண்டலமு மண்டலமு மிடங்கொளாது
உள்ளபடி இக்குளிகை யார்தான் செய்தார் உத்தமனே கருவாளிசெய்வான் பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar