போகர் சப்தகாண்டம் 2266 - 2270 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2266 - 2270 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2266. பாரப்பா வின்னமொரு மார்க்கம்பாரு பாங்கான மகமேரு கிழக்கேயப்பா
நேராகத் தானிருக்கும் பர்வதந்தான் நேர்மையுள்ள அஷ்டகிரி என்பார் சித்தர்
சாராக யானுமல்லோ குளிகையிட்டு சட்டமுடன் சீனபதிவிட்டு யேகி
காரான கரிரோனின் வனமுந்தாண்டி கடினமுடன் மலையோரம் சென்றேன்தானே

விளக்கவுரை :


2267. சென்றேனே யடிவாரத்தருகிலப்பா திரளான கோடிமுனி சித்தருண்டு  
குன்றினிடம் உட்சென்றேன் யானுமங்கே குறிப்பான குத்துக்கால் ஒன்றுகண்டேன்
பற்றியெனும் பெருச்சாளி வாகனத்தில் பாங்குடனே கணபதியும் வீற்றிருக்க
வென்றிடவே குத்துக்கல் பிள்ளையாரை வேண்டினேன் போகரிஷி வேண்டினேனே

விளக்கவுரை :

[ads-post]

2268. வேண்டியே நிற்கையிலே கணபதிதானும் விருப்பமுடன் போகரைத்தான் வளப்பங்கேட்டார்
தாண்டியே வனமெல்லாந் தான்கடந்து தகமையுடன் வருவதற்கு நீதியுண்டோ
பூண்டமனதுறுதியினால் வந்தாய்நீயும் பூலோகமானிடனும் வரலாமோதான்
மாண்டுமே போவதற்கு சித்தர்தாமும் மன்னவனே தான்சபிப்பார் பெருமைபாரே

விளக்கவுரை :


2269. பாரேதான் என்றலுமே கணபதிதானும் பாங்குடனே போகரிஷி திடுக்கிட்டேங்கி
நேரேதான் கணபதியை சாஷ்டாங்கித்து நிலைமைபெற சுவாமிஎனக்கெதியேதென்ன
சாரவே என்மீதில் பட்சம்வைத்து சாங்கமுடன் எந்தனுக்கு உபதேசித்து
சூரனாமிருக்குமிடம் காணவென்று சுந்தரரும் வாக்களித்தார் சூட்சந்தானே

விளக்கவுரை :


2270. சூட்சமுட னுபதேசமருளும்பெற்று சுடரொளியாம் பத்மாசூரனையுங்காண
தாட்சியுடன் இரண்டாங்கால் வரையுமேறி தண்மையுடன் முதற்கோபுர வாசல்நின்றேன்
காட்சியுடன் சூரனது ஸ்தலமும் கண்டேன் கைலாச சட்டமுனி சமாதிகண்டேன்
மாட்சியுடன் கைலாசமுனிதானங்கே மார்க்கமுடன் சமாதிநிலை யறிந்திட்டேனே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar