போகர் சப்தகாண்டம் 2276 - 2280 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2276 - 2280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2276. தானான சித்தருட வுளவுகாணீர் தாரணியில் ரிஷிமுனிவர் மர்மங்கோடி
வேனாக நல்லவர்போல் நேசிப்பார்கள் விருதாவாய் வாதுமிகப்பேசியல்லோ
கோனாகக் குருநிந்தை கூறுவார்கள் குடிகெடுக்கும் சித்தருண்டு குவலயத்தில்
தேனான வமுர்தமது யீவாரப்பா தெரியாமல் கருவழியாற் கொல்லுவாறே

விளக்கவுரை :


2277. கொல்லுவார் அவர்கள்பதி செல்லவேண்டாம் கொடிமுடியுஞ் சித்தரப்பா கோடியுண்டு
வெல்லவே சமாதியிடந் தானழைப்பார் விருதுமிகப் பேசியல்லோ சாபமீவார்
செல்லவே ஞானத்தின் வழிகேட்பார்கள் சேறான முப்பூவின் மார்க்கங்கேட்பார்
புல்லவே நாதத்தின் முறையுங்கேட்பார் புகழான வுறுக்கினத்தின் கிடங்கேட்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2278. கேட்கையிலே தூரநின்று வார்த்தைகேளு கெடியான கும்பகத்திலிருந்துகொண்டு
நீட்டமுடன் வனாகதத்தை மேலேநோக்கி நெடுந்தூரங் காணிறுத்தி வூணிப்பாரு
பூட்கமல லட்சுமியும் பொருந்திநிற்பாள் புகழான விசுத்தியிலே ஏறிப்பாரு
தாட்கமலத் தாள்திறந்து போகம்பார்த்துச் சதாகாலந் தரணியிலகுவாய்வாழே

விளக்கவுரை :


2279. வாழவென்றால் வெகுகோடி காலம்வாழ்வாய் வாகான கற்பமது தெரிந்துகொண்டு
நீழவே காயசித்தி மாயசித்தி நெடுங்காலந் தானிருந்து நிலைத்துவாழ
மாழவே போகநிலை யறியவேண்டும் மகத்தான விசுத்திதனை சுழுத்தியிலேமாட்டி
சாழவே சடாஷரத்தை மேலேநோக்கு சதானந்த கணபதியை பூசிப்பாயே

விளக்கவுரை :


2280. பூசிக்கணபதியுங் கந்தன்தானும் புகழாக வாணியுடன் மனமுவந்து
நேசித்து வாலையுடன் நிரூபிதன்னை நேர்மையுடன் கண்டறிந்து நிச்சயித்து
ஆசையுடன் பிர்மான லாகிரிதன்னில் அப்பனே விசுத்தியிலிருந்துகொண்டு
காசையெனும் பொன்னாசை தனைமறந்து காசினியில் சித்தனைப்போல் வாழலாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar