போகர் சப்தகாண்டம் 2281 - 2285 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2281 - 2285 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2281. சித்தான சித்தனைப்போல் வாழவென்றால் ஜெகதலத்தில் விண்ணமுண்டு காட்சியப்பா
கத்தனாம் பிர்மாவின் பதியைக்காணப் பகருகிறேன் மூன்றாங்கால் வரைதானப்பா
முத்தமுடன் நீர்சென்று பார்த்துவந்தால் மோசமில்லை யின்னம்வெகு கெவினியாவாய்
சுத்தமுடன் கைலாசநாதர்தாமும் சூட்சமுடன் தாமுரைத்தார் திரும்பினேனே

விளக்கவுரை :


2282. திரும்பியே குளிகையது விண்டுகொண்டு தீரமுட னடியேனு மேலேசென்றேன்
குரும்பான சித்தர்களாம னேகம்பேர்கள் கூடியேவெகுபேர்கள் வந்தாரப்பா
இரும்பான சித்தரப்பா யானுங்கண்டேன் எழிலாக எந்தனையு மாரென்றார்கள்
சுருப்புடனே காலாங்கி தனைநினைத்து துரிதமுடன் போகரென்று வசனித்தேனே

விளக்கவுரை :

[ads-post]

2283. வசனித்த போதையிலே வடியேன்மீது வாகுடனே களிகூர்ந்து கூறலுற்றார்
துசனித்து சமாதியிடம் கொண்டுசென்றார் தோற்றமுடன் பிரம்மாவின் வாசல்கண்டேன்
நிசமுடனே கோட்டைக்குள் சுரங்கம்கண்டேன் நெடிதான சுரங்கத்தின் வழியைக்கண்டேன்
புஜமுடைய கிங்கிலியர் ஆயிரம்பேர் புனிதமுடன் கொலுவிருந்தார் ரிஷிகள்தாமே

விளக்கவுரை :


2284. தாமான ரிஷிமுன்னே சென்றேன்யானும் சதகோடி சூரியர்போல் சமாதிக்குள்ளே
பூமானாம் பிரம்மாவும் வுள்ளிருந்து பிரியமுடன் எந்தனிடம்வார்த்தைசொன்னார்
காமான வாகவல்லோ வடியேன்தானும் கைகட்டி முன்னின்று வார்த்தைசொன்னேன்
தேவான பிரம்மாவு மெந்தனுக்கு தெளிவாகத் தானுரைத்தார் பிரம்மந்தானே

விளக்கவுரை :


2285. பிரமனசாமியார் எந்தன்மீது பிரியமுடன் பட்சமுற்று கேட்கும்போது
திரமுடனே வடியேனுங் கால்நடுங்கி தெளிவாக யானுரைத்தேன் கோடிவண்ணம்
பரமானங் கண்டல்லோ குளிகைபூண்டு பட்சமுடன் தமதிடத்தில் வந்தேன்சாமி
சிரங்குவித்து நமஸ்கார மிகவுஞ்செய்து திடமுடனே வுத்தாரங் கேட்டிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar