போகர் சப்தகாண்டம் 2286 - 2290 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2286 - 2290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2286. கேட்டேனே பிரம்மாவு மனமுவந்து கிருபையுடன் எந்தனுக்கு வழியுஞ்சொன்னார்
நோட்டமுடன் சீனபதிதேசத்தார்க்கு நுணுக்கமுள்ள வதீதமென்ற வித்தைதன்னை
தோட்டமுடன் வுளவுமுதலெல்லாஞ் சொல்லி தேசத்தில் சித்துவென்ற மர்மந்தன்னை
காட்டியே விட்டதொரு வண்மையெல்லாம் கண்டாரே யாமானால் சபிப்பார்காணே

விளக்கவுரை :


2287. காணவே லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும் கைலாசங்காணுவதும் சூட்சமாகும்
நாணவே நாதாக்கள் கைமறைப்பை நாட்டமுடன் கொட்டிவிட்டாய் கோடாகோடி
மாணவே குளிகையது பூண்டுகொண்டு மகத்தான தேசமெல்லாஞ் சுத்திவந்தீர்
வேணவே வினோதமென்ற கருவியெல்லாம் வெட்டவெளி பாழாகிவீணாய்ப்போச்சே

விளக்கவுரை :

[ads-post]

2288. போச்சென்று விடுகாதே புண்ணியாகேள் புகலுகிறேன் நாலாங்கால் வரைதானப்பா
மாச்சென்ற வியாசர்முனி சமாதியுண்டு மகாகோடி ரிஷிகளெல்லாம் அங்கிருப்பார்
ஆச்சர்யமான தொருமகிமையுண்டு அதுக்கப்பால் கிள்ளைவனந்தானுமுண்டு
பாச்சலென்ற தபகோடி ரிஷிகளப்பா பாரவனந்தனிலிருப்பார் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


2289. சொல்லவென்றால் நாவுமில்லை பாவுமில்லை சோதியுடல் மலைமீது தோற்றங்காணும்
வெல்லவே சோதிரிஷி வியாசர்தானும் வினோதமுடனங்கிருப்பார் கொலுக்கூடந்தான்
புல்லவே சித்தர்களின் கூட்டவர்க்கம் பூலோகமிடங்கொள்ளாததீதமெத்த
பல்லவே கொங்கணரின் கூட்டத்தார்கள் பகரவேமுடியாது பண்பதாமே

விளக்கவுரை :


2290. பண்பான நாலுபக்கம் கோட்டைவாசல் பளிங்குமண்டபங் களங்குண்டு
திண்பான தடாகங்கள் குகைகளுண்டு திடமான குன்னுகளில் தவசிருப்பார்
பண்பான தபசியிடம் யானும்சென்றேன் கருத்துடனே சித்தரெல்லாம் எனைக்கண்டார்கள்
வண்புடனே யடியேனும் தாள்பணிந்து வணக்கமுடன் குருவணக்கமோதிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar