போகர் சப்தகாண்டம் 2296 - 2300 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2296 - 2300 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2296. காணுமே நாதாக்கள் சித்துதாமும் காட்டினார் மகிமைகள் மெத்தவுண்டு
தோணவே வரைக்குள்ளே செல்லும்போது துறையான சமாதிமுகம் கண்டுசென்றேன்
வேணவே ருத்திரனார் சமாதிபக்கம் விட்டார்கள் எந்தனையு முனிவர்தானும்
நாணவே யடியேனும் காலாங்கிதம்மை நலமுடனே தாள்பணிந்து நவின்றிட்டேனே

விளக்கவுரை :


2297. நவின்றிட்டேன் ருத்திரர் சமாதிபக்கம் நயமுடனே தலைவாசல் நிற்கும்போது
துவின்றிட்ட சமாதியது தாள்திறக்க துலங்கவே ருத்திரனார் குருவைக்கண்டேன்
புவின்றிட்ட திருமுகத்தை பார்க்கும்போது பொலிவான ஜோதியொளி மின்னல்போலாம்
கவின்றிட்ட தேகமது கூச்சலிட்டு கண்காணாஜோதிதன்னனில் சொக்கிப்போச்சே

விளக்கவுரை :

[ads-post]

2298. போகையிலே ருத்திரனும் கண்டுஎன்னை பொற்புடனே மனதிறங்கி யெனையாரென்ன
சாகமுடன் காலாங்கி சீஷனென்றேன் சட்டமுடன் சொல்கையில் ருத்திரர்தாமும்
பாகமுடன் எந்தனுக்கு வரமுமீய்ந்தார் பட்சமுடன் வரம்பெற்று சித்தர்பக்கம்
சோகமுடன் நிற்கையில் சித்தர்தாமும் சோதித்து மலைபோகச் சொன்னார்தாn 

விளக்கவுரை :


2299. சொன்னவுடன் அடியேனும் குளிகைபூண்டு சோதித்து மலைமீதில் சென்றபோது
அன்னமெனும் பட்சியையான் கண்டேனங்கே அன்புடனே வன்னமதுகண்டபோது
நன்னையா எந்தனுக்கு வன்னந்தானும் நலமுடனே ருத்திரர் மகிமைதன்னை
பன்னயமாய் தாம்உரைத்து பட்சமுடன் முதுகேற்றிப் போகலாச்சே

விளக்கவுரை :


2300. முதுகின்மேல் எந்தனையுமேற்றிக்கொண்டு முனையான மலைமுகவில் கொண்டுசெல்ல
கதும்புடனே யானுமங்கே இறங்கினேன்யான் கதிரவனார் தோற்றமது காணவில்லை
உதுப்மான விருள்மூடி பனிகள்நிற்கும் வுயர்ந்தமலை சுற்றிலுமே சித்தரப்பா 
ததும்பலுடன் நிற்கிறதைக் கண்டேன்யானும் தாடகையாள் சமாதியது சொன்னார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar