போகர் சப்தகாண்டம் 2301 - 2305 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2301 - 2305 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2301. சொன்னாரே தாடகையாள் சமாதிதன்னை சொரூபமென்ற சூக்குமத்தைக்காணவென்று
நன்னயமாய் ஆறாங்கால் வரைதானப்பா நலமுடனே யான்சென்று நிற்கும்போது
வன்னமது வாய்திறந்து கூறிற்றங்கே வளமையுடன் தாடகையின் மார்க்கந்தன்னை
பின்னமிலா தானுரைத்த தெந்தனுக்கு விகற்பமுடன் உரைத்திடவே மயங்கினேனே

விளக்கவுரை :


2302. மயங்கினேன் காலாங்கிதனைநினைத்தேன் மாற்கமுடன் ராவணன்தன் ரணகளத்தில்
தயங்கமுடன் தாடகையாள் பங்கங்கெட்டுத் தாரிணியில் சமாதியது பூண்டபோது
தயங்கமுடன் அஷ்டகிரி பர்வதத்தில் ரூபமுடன் தாடகையாள் சமாதிகண்டேன்
பயங்கியே மேல்வரையிற் சென்றுபோனேன் தாக்கான சித்தர்களைக் கண்டேன்யானே

விளக்கவுரை :

[ads-post]

2303. கண்டேனே பலகோடி ரிஷிகள்மார்க்கம் கருத்திலே தான்நினைத்து பூசித்தேதான்
மண்டலங்கள் சுற்றியல்லோ குளிகைகொண்டு மானிலத்தில் வெகுகோடி வதிசயங்கள்
மண்டலங்கள் விண்டலங்கள் முழுதுஞ்சுற்றி தாரணியில் குளிகைகொண்டு பறந்தேன்யானும்
பண்புடனே சமாதிபுரம் சுற்றிவந்தேன் பாரினிலே தாடகையாள் கதைகேட்டேனே  

விளக்கவுரை :


2304. கேட்டவுடன் ஏழாங்கால் வரைதானப்பா கெடியாக மேல்வரை சென்றபோது
நீட்டமுடன் ஜடாயுவனமங்கே கண்டேன் நேரான வனமுகத்தில் வீரபத்திரன்
வாட்டமுடன் சமாதியது தன்னைக்கண்டேன் வளமான தாள்வாசல் பூட்டிருக்கும்
கூட்டமெனும் ராட்சதர்கள் பூதக்கூட்டம் பெருமையுடன் சமாதியிடம் நிற்பார்பாரே

விளக்கவுரை :


2305. பார்க்கையிலே வீரபத்திரன் சமாதிதானும் பாங்குடனே வயிரக்கல் பச்சைக்கல்லாம்
தீர்க்கமுடன் சமாதியது திறக்கவென்றால் திறளான காவலுடன் திறக்கவேண்டும்
மூர்க்கமுடன் ராட்சதர்கள் முன்னேநின்று முடிசாய்ந்து கரங்குவித்து முன்னேநிற்பார்
ஆர்க்கவே போகாது முனிகளாலும் வஷ்டகிரி பர்வதத்தின் மகிமைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar