போகர் சப்தகாண்டம் 2306 - 2310 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2306 - 2310 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2306. மகிமையுடன் வீரபத்திரன் சமாதிதன்னில் மதிப்புடனே ஓங்காரச்சத்தம் கேட்டேன்
பகிரதனாம் சீஷவர்க்கம் பக்கம்நின்றார் பரிவான வீரபத்திரன் வார்த்தை சொல்வார்
சகிதமுட னுத்தாரஞ் சொன்னாரங்கே சட்டமுனி பக்கமது சமாதியுண்டு
துவிதமுடன் எந்தனுக்கு ஞானமார்க்கம் துப்புரவாய் போதித்தார் ரிஷிகள்தாமே

விளக்கவுரை :


2307. தாமேதான் போதனைகள் யாவுங்கேட்டு சாங்கமுடன் எட்டாங்கால் தன்னிற்சென்றேன்
வேமேதான் மேல்வரையிற் சென்றபோது வியர்வான ருத்திரகாலன் தவசிருப்பான்
தாமேதான் தவநிலையைக் கண்டபோது சாஷ்டாங்கம் தாள்பணிந்து கரங்குவித்து
நாமமுட காலாங்கி தனைநினைத்து நாதரிஷி பாதாம்புயத்தை நாடினேனே

விளக்கவுரை :

[ads-post]

2308. நாடினேன் ருத்திரகாலன் தன்னைத்தானும் நாட்டமுடன் கண்டல்லோ தரிசித்தேதான்
தேடியே யவர்பாதம் தொழுதுநின்று தீரமுடன் காலனெதிர் நின்றேன்யானும்
வாடியே நின்றவென்னைக் காலன்தானும் மதிப்புடனே சிறுபாலா யாரென்றார்கள்
கூடியே போகரிஷி யடியேன்தானும் குளிகையிட்டு வஷ்டகிரி காணலாச்சே

விளக்கவுரை :


2309. காணவே வஷ்டகிரி தன்னில்நின்றேன் கைலாசமிதற்கீடு சொல்லப்போமோ
நாணவே காலனவன் சமாதிபக்கம் நாதாக்கள் கோடிபேர் தவசிருப்பார்
வேணபடி வுபசாரமதிகங்காட்டும் வெழிலான காலனிட வதீதமெத்த
மாணவே காந்தமென்ற கோட்டையுண்டு மகத்தான சித்தர்களோ சொல்லப்போமோ

விளக்கவுரை :


2310. சொல்லவென்றால் காஞ்சனமாமலைக்குள்ளே சுடரொளிபோல் சித்தொருவர் இருப்பாரங்கே
நல்லதொரு சமாதியது வஞ்சனக்கல் நலமான வஞ்சனத்திலுள்ளிருந்து
புல்லவே லோகத்தினதிசயத்தைப் புகட்டுவார் முனிவர்க்கும் சித்தருக்கும்
செல்லவே செந்தூரக் காடொன்றுண்டு ஜெகத்தினில் ஈசனன்றி காணார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar