போகர் சப்தகாண்டம் 2311 - 2315 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2311 - 2315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2311. காணணென்றால் இன்னம்வெகு வதிசயங்கள் கண்டேனே கல்லென்ற வெள்ளைக்கல்லில்
மாணவே உள்ளிருக்கும் ரவைதானப்பா மண்டலத்தில் கண்டதில்லை மாந்தரங்கே
தோணவே பிரகாசமான ஜொதிசுடரொளிப்போல் வயிரங்கள் கூறப்போமோ
நீணவே நாதாக்கள் காண்பதல்லால் நீணிலத்தில் காமிகட்கு கிட்டாதன்றே

விளக்கவுரை :


2312. அன்றான ஜடாயுவுட வனத்தில்காணும் அதிகாயன் சமாதியது இருக்கக்கண்டேன்
தன்றான சமாதிமுன்னே நின்றபோது தயவுள்ள வதிகாயன் வாக்குரைத்தார்
குன்றான மலைதேடி குகைகள்தேடி குளிகைகொண்டு மலையேறி வந்ததென்ன
நன்றாக என்னையுந்தான் கேட்டபோது நலமுடனே யானுரைத்த வண்மைகேளே

விளக்கவுரை :

[ads-post]

2313. கேட்டவுடன் அடியேனும் கிருபையோடு கெவனமுடன் காலாங்கிநாதர்தம்மை
நீட்டமுடன் தான்நினைத்து கூறலுற்றேன் நெடுந்தூரம் ருத்திரனார் காலனுக்கு
வாட்டமுடன் அஷ்டகிரிகாணவென்று வாகுடனே மலையேறி வந்தேனென்ன
மாட்டிமையாய் ருத்திரனார் யெந்தனுக்கு மகிழ்ச்சியுடன் உபதேசம் சொன்னார்தாமே

விளக்கவுரை :


2314. சொன்னவுடன் குளிகையது பூண்டுகொண்டு சுற்றியே பார்த்துமங்கே இருந்தபோது
மன்னனா மரிச்சந்திரன் பாட்டன்தானும் மகபதியான் கொலுக்கூட சமாதிதன்னை
பன்னவே பார்க்குகைக்கு வருகிற்சென்றேன் பாராளுஞ்சமாதியிலே வாக்குண்டாச்சு
நன்னயமா எந்தனுக்கு ஞானோபதேசம் நவின்றிட்டார் ராஜமன்னர் நவின்றிட்டாரே

விளக்கவுரை :


2315. நவிலவே வினோதமென்ற வித்தைதானும் நாதாக்கள் செய்ததில்லை நாட்டிலேதான்
புவியுடனே காலாங்கி நாதர்பாதம் புகழ்ச்சியுடன் தாள்வணங்கி சாற்றலுற்றேன்
பவிமதிசந்திரன் போல் காரந்தன்னைப் பக்குவமாய்தான்பொரித்து முட்டைபோல்
குவியலுடன் தான்சீவி வளவதாக கொற்றவனே முட்டைபோ லெடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar