போகர் சப்தகாண்டம் 2316 - 2320 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2316 - 2320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2316. கொள்ளவே முட்டைதனை யெடுத்துக்கொண்டு கோபாலாசொல்லுகிறேன் குறிப்பாய்கேளு
விள்ளவே வாயிரம்பேர் கூட்டத்தார்கள் விருப்பமுடன் தான்பார்த்து களிப்புற்றேங்க
மெல்லவே மணல்தனை பூமிதன்னில் மேன்மையுடன் கொட்டியே மேடைசெய்து
பள்ளமதாய் குறியொன்று நடுமையத்தில் பாங்குடனேதான் பரவலாகச்செய்யே

விளக்கவுரை :


2317. செய்துமே ஜெனங்களெல்லாம் பார்த்துஏங்க சிறப்புடனே பொரிகாரமென்னும்முட்டை
கைதனிலே தானெடுத்து மைந்தாபாரு கருவாக முட்டைதனையெடுத்துக்கொண்டு
வெய்தமுடன் மந்திரங்கள் மிகவுங்கூறி வேதாந்த தாய்தனையே மனதிலுண்ணி
பக்குவமாய் முட்டைதனை மணலிற்பரவி பட்சமுடன் ஜலமதனைவிட்டிடாயே
விளக்கவுரை :

[ads-post]

2318. விட்டவுடன் முட்டையது கரைந்துபோகும் வேகமுடன் காரமது ஒன்றுங்காணார்
சட்டமுடன் மெய்யான முட்டைதன்னை சார்பாக கூப்பிடுதூரமப்பா
தட்டாமல் மண்மறைவில் புதைத்துப்போடு தாரணியில் ஒருவருக்குந் தெரியவேண்டாம்
திட்டமுடன் சீஷனைக்கொண்டெடுக்கச்சொல்லு தீரமுடன்தானெடுத்து தருவான்பாரே

விளக்கவுரை :


2319. தருகையிலே சனங்களெல்லாம் மிகநடுங்கி தாரிணியி லிவர்போல சித்தருண்டோ
கருமான மிகவறிந்த சித்தர்தாமும் காசினியில் மாந்திரிகன் இவனென்பார்கள்
உருதெரியா மையுடைய ராசயோகன் வுலகத்தில் சித்தனிவன் வசியராஜன்
பெருமைபுகழ் படைத்தொரு தீரனாகும் பேருலகில் சித்தனைப்போல் உறுகாணாரே

விளக்கவுரை :


2320. காணாமல் ஜெனங்களெல்லாம் மிகதவிப்பார் கண்டவர்கள் விண்டவர்கள் யாருமில்லை
தோணாமல் கருவான முட்டையெங்கே தோற்றமுடன் கண்டோமே கண்ணற்காணோம்
வீணாகப்பேசியல்லோ மாந்தரெல்லாம் விருதாவாய் தாறுமாறாய் புத்திகெட்டு
நாணமுடன் இறந்தேங்கி நடுக்கமுற்று நாதாக்கள் மாயவலை சிக்கினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar