போகர் சப்தகாண்டம் 2321 - 2325 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2321 - 2325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2321. சிக்கவே முட்டைதனை யாருங்காணாச் சிறப்புடனே தானெடுத்து காண்பித்தேதான்
தக்கவே மந்திரங்கள் ஒன்றுசொல்லி சார்புடனே கைமறைப்பு வதீதஞ்செய்வார்
சொக்கவே மறைப்பெல்லாம் சூட்சமாகச்சூட்டினேன் மாந்தர்க்கு உரைத்தோம்யாமும்
நிக்கவே லோகத்தில் மறைப்பு நிசமான வித்தைபோலாகுந்தானே

விளக்கவுரை :


2322. தானான கழற்சிக்காய் வாயிரந்தான் சதமுடனே யோகமது பொடியை மைந்தா
வேனான பொடிதனிலே மைபோலாட்டி விருப்பமுடன் பழச்சாற்றாலரைத்து மைந்தா
கோனான குருபரணைத் தனைநினைத்து குமுறவே கழற்சிக்காய் மேலேபூசி
பானான ரவிதனிலே காயவைத்து பாங்குடனே கோட்டையது கட்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2323. கட்டவென்றால் கழற்சிக்காய் கோட்டையாகும் கருவான கார்தமது குச்சிக்கேற்றி
திட்டமுடன் குச்சிதன்னால் கோட்டைதன்னை திறமுடனே தானடிக்க கலைந்துபோகும்
மட்டமென்ற மண்மேலே ஓடிப்பாயும் மகத்தான கழற்சிக்காய் கிட்டிக்காணும் 
பட்டவுடன் காந்தமது தானிழுக்கும் மகத்தான சித்துயிது வதீதந்தானே

விளக்கவுரை :


2324. அதீதமென்ற வித்தையது யாருங்காணார் ஆச்சரியக் கொம்புக்குள் காந்தவித்தை
கதீதமென்ற காந்தத்தால் சகலசித்தும் கருவாக வாடுதற்கு காணியாகும்
ததிதமென்ற கருவாளி காண்பான்பாரு சூட்சாதி சூட்சமத்தை காணான்மாடே

விளக்கவுரை :


2325. மாடான மாடுகள்தான் சண்டிமாடு மானிலத்தில் காண்பதுவும் அருமைமெத்த
கோடான கோடிமுனி ரிஷிகள்வேதை குவலயத்தில் கூறவுந்தான் முடியாதப்பா
பாடான வின்னமொரு கருமானங்கேள் பாடுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நீடான முட்டையது காற்றில் போக நீணிலத்தில் பறப்பதற்கு வினோதங்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar