போகர் சப்தகாண்டம் 6 - 10 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6 - 10 of 7000 பாடல்கள் 

bogar-saptha-kaandam

6. அறைந்திட்டேன் ஏழுலட்சம் கிரந்தந்தன்னைஅன்பாக அதிசயங்களெல்லாம் பார்த்து
குறைந்திட்டேன் போகரேழாயிரமாக கூறினேன் லோகத்து மாந்தர்க்காக
வறைந்திட்டேன் நாலுயுக அதிசாயங்கள் யாவும் வாகாக பாடிவைத்தேன் சப்தகாண்டம்
வுறைந்திட்டேன் சீனதேசம் யானும்சென்று பாடினேன் போகரிஷி புகலுவேனே

விளக்கவுரை :


7. புகலுவேன் வாதியென்ற பேர்களுக்கு போற்றியே மெய்ஞானம் வரவேண்டும்
நிகலுகின்ற ஆதாரம் அறியவேண்டும் நீக்கறிய காலத்தை நிறுத்தவேண்டும்
புகலுகின்ற பராபரியை பூசிக்கவேண்டும் பானமென்றால் தூசிக்காய் பருவம்வேண்டும்
மகலுகின்ற குருமுறையும் கைமுறையும் வேண்டும் மறுகாட்டாவிதெல்லாம் வாதம்போச்சே

விளக்கவுரை :

[ads-post]

8. போகாமல் வாதத்தை நிறுத்தவென்றால் போக்கோடே சவர்க்காரக் குருவைப்பண்ணு
வாகாக முப்பைநன்றாய் கட்டியிறு மருவியதன் பூரத்தையுப்பு பண்ணு 
தாகாறும் தாளகத்தை நீறுபண்ணு சமர்த்துடனே வங்கத்தை சுண்ணம்பண்ணு
வேகாத துரிசியைத்தான் குருவாய்ப்பண்ணு விளங்கியதோர் வாதமெல்லாம் கைக்குள்ளாச்சே

விளக்கவுரை :


9. கரிமுகன் பதம் போற்றி கடவுள் பதம் போற்றி கடாட்சித்து எனையீன்ற ஆயிபதம் போற்றி
அரிஅயன் பதம் போற்றி வாணி பதம் போற்றி அருள்தந்த லட்சுமிதான் ஆயிபதம்போற்றி
வரியமாம் பாட்டனென்ற மூவர்பதம் போற்றி துணையான காளாங்கி அய்யர்பதம்போற்றி
நிரிவிகற்ப சமாதியுற்ற ரிஷிகள்பதம் போற்றி நிறைந்துநின்ற சரளமே காப்புதானே

விளக்கவுரை :


10. தானான ஏழுலட்சம் சிவன்தான் சொன்ன சாஸ்திரத்தின் கருவெல்லாம் திரிக்கப்பண்ணி
கோனான குருநூலாம் ஏழுகாண்டம் கொட்டினேன் வாதமென்ற முறைதடன்னை
பானான பாட்டுரைதான் கருக்கள் கேட்டு பயின்றெடுத்த ஆயிசொன்ன பண்புகேட்டு
தேனான காளாங்கி ஐயரையுங் கேட்டு செப்பினேன் சத்தகாண்டம் திறமாய்த்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar