11. காணவே மூலமது அண்டம்போல
காரணமாய் திரிகோணமாகி நிற்கும்
பூணவே மூன்றின்மேல்
வளையமாகும் பிரம்பாக இதழதுதான் தானுமாகும்
நாணவோ நாற்கமலத்து
அட்சரத்தைக்கேளு நலமான வயநமசி ரீரீயாகும்
மூணவே முக்கோணத்துள்
ஒளிஓங்காரம் முயற்சியால் அதற்குள்ளே யகாரமாச்சே
விளக்கவுரை :
12. அகாரத்தின் மேலாக கணேசன்
நிற்பார் ஆதியொருகோணத்தில் உகாரம்நிற்கும்
உகாரத்தின் வல்லமையால் சக்தி
நிற்பாள் ஒடுங்கியதோர் மூலையொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்
குண்டலியாஞ்சக்தி பெண்பாம்புபோல் சுருட்டி சீறிக்கொண்டு
சுதாரமாய் சுழிமுனையோடு
உருவிநிற்பாள் துரியாதீதமென்ற அவத்தைதானே
விளக்கவுரை :
[ads-post]
13. அவத்தைக்கு இருப்பிடம்
மூலமாகும் அழகான கதலிப்பூ எட்டிதழாய் நிற்கும்
நவத்திற்கு நந்தியநூல்
வாயில்நிற்பாள்நற்சிவமாம் சிகாரத்தில் கோடியாகும்
வவத்தைக்கும் வாய்திறவான்
மலனால்மூடும் மைந்தனே எட்டிதழில் எட்டுசக்தி
பவத்தைக்கு சக்திஎட்டின்
பேரேதென்றால் பாங்கான அனிமாவும் லகிமாத்தானே
விளக்கவுரை :
14. தானான லகிமாவும் கிரிமாவோடு
தங்குமே சுரக்கத்தான் சத்தில்சத்து
பூனான பிரதாசத்தி பிரகாமிசத்தி
பேரேட்டுத்தேவரையும் தளத்தில் நின்று
ஏனான இதழாலே மூடிக்கொள்வார்
ஏத்தமாம் நந்தியைத்தான் காணாமையால்
வானான வஸ்துவைநீ பாணம்பண்ணி
வங்கென்று வாங்கியே கும்பித்ததே
விளக்கவுரை :
15. ஊதினால் என்வாசத்தில்
அகரியாலே உலவுவார் இதழெல்லாம் திறந்துவிட்டு
போதினால் ஆயிசொன்ன ஏவல்
கேளப்பா பூந்துபார் நந்திகண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான
வருவித்திக்கும் வாசலையே திறவாமல் மூடிக்கொள்வர்
ஏதினால் இதுக்குல்லே
வாசிமாட்டு இடத்தோடி வங்கென்றே உள்ளேவாங்கே
விளக்கவுரை :