16. வாங்கியே நந்திதனில்
சிங்கென்றுகும்பி வலத்தோடில் சிங்கென்று உள்ளேவாங்கி
தாங்கியே வங்கென்று
இருத்திக்கும்பி தளமான தெளிவாகும் வெளியால்காணும்
ஓங்கியே மாணிக்க
ஒளிபோல்தோன்றும் உத்தமனே மூலத்தின் உண்மைகாணும்
தேங்கிய வல்லமையாஞ்சத்தி
தானும் சிறந்திருந்தால் பச்சைநிறமாகுந்தானே
விளக்கவுரை :
17. பச்சைநிற வல்லமையை பணிந்துபோற்று பாங்கான யாருக்கும் பருவம்சொன்னால்
மொச்சையாய் மூலமது
சத்தியானால் மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
கச்சைநிற காயமுமே
கனிந்துமின்னும் கசடகன்று ஆறுதளம் தன்னில்தோன்றும்
துச்சைநிற வாதமது
சொன்னபடிகேட்கும் துரியத்தின் சூட்சமெல்லாம் தோன்றும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
18. பாரென்று புரிஅஷ்ட
நாவில்சேர்க்கும் பளிச்சென்று மூலத்தில் ஜோதிகாணும்
காரென்ற தீபவொளி கண்ணோகூசும்
கணபதிதான்கண்முன்னே நிர்த்தம்செய்வார்
ஊரென்ற யோகத்துக்கு
உறுதிசொல்வார் உற்பணமாம் வாதத்தின் உண்மைசொல்வார்
நேரென்ற சதாசிவத்தின்
நிலையும் சொல்வார் நீச்சென்று விட்டாக்கால் யோகம்போச்சே
விளக்கவுரை :
19. போச்சென்று விடுக்காதே
மூலந்தன்னை போகையிலும் இருக்கையிரு மனத்தில்பூனு
சேச்சென்ற வீரசத்தம்
கேளாய்பக்கம் புரந்திருந்து லட்சியத்தை பூட்டி வாங்கு
மாச்சென்று வாசியைநீ
தவறொட்டாதே மனந்தன்னை மூலத்தில் மருவிச்சேர்க்கும்
மேச்சென்று கடினம்போல்
முன்னேகாணும் விடுகாதே மாச்சலாய் விரைந்துண்ணே
விளக்கவுரை :
20. உன்னியே பழகுமட்டும்
கடுக்காய்காணும் உட்புகுந்து பார்த்துவந்தால் உறுதிகூடும்
வன்னியே துலங்குமட்டும்
மனதலைக்கும் மாசற்றொளிவு கண்டால் மகிழ்ச்சியாகும்
பின்னியே பிங்கலையில்
இசையும்கூடும் பேரானசுழினைதன்னில் கெட்டிசேரும்
நன்னியே நமன்வெகுன்டு
அப்பால்போவான் ஆளெல்லாம் கடிகையுமாய் நாட்டலாமே
விளக்கவுரை :