போகர் சப்தகாண்டம் 21 - 25 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 21 - 25 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
21. வாசியோகம் நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி
ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்
தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப்பிணமாக சொல்லுக்கொக்கும்
பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோகும்

விளக்கவுரை :


22. சுழிமுனையே திறந்தாக்கால் மனமொடுங்கும் சுழியிலே அகப்பட்ட துரும்புபோலாம்
வழிமுனையே ஆதாரம் ஏறலாகும் மகத்தான சித்தியது எட்டுவாகும் 
சுழிமுனையாஞ் சுழித்துள்ளே அழித்திடாது கணக்கோடே வாசியென்ற குதிரையேறு
சுழிமுனையில் இருந்தாக்கால் அங்கொன்றுமில்லை

விளக்கவுரை :

[ads-post]

23. ஏறவே ஐம்புலனும் உலக்கையாக விடும்பான ஆங்காரம் உரலுமாக
ஆறவே ஆசையது உருவமாக வழுப்பான மனதை உள்ளெகாட்டிக்கொண்டு
மூறவே ஆசையதை அடித்துத்தள்ளி முழுமோசமாகியல்லோ பிரலப்பண்ணும்
தேறவே யோகம்முதல் ஞானம்ரெண்டும் தெரியாதே இறந்தவர்கள் கோடிதானே

விளக்கவுரை :


24. கோடியென்ற நரஜென்மம் மண்ணாசையாலும் குணமான ஆசையுட தீனியாலும்
ஓடியென்ற மோகத்தில் பெண்ணாசையாலும் மோகத்தால் பூட்டுகின்ற பொன்னாசையாலும்
தூடியென்ற சுகபோக சுகியினாலும் துலையாத பாகத்தின் மயக்கத்தாலும்
வாடியிந்த உலகமெலாம் மயக்கமாச்சு மக்களே வாடீநுஞானம் பேச்சுமாச்சே

விளக்கவுரை :


25. ஆச்சென்ற பேச்சாலே ஒன்றுமில்லை அரிதான சாத்திரத்தை ஆராய்ந்து பார்த்து
மூச்சென்ற மூச்சாலே சகலஜனமிறந்தார் மூச்சடங்கி சாகாமல் முயற்சிகேளு
நாச்சென்ற நடுமூலம் கண்டத்தூன்றி நலியாமல் வுடவீட்டில் கட்டி
தோச்சென்ற தேசியெங்கும் ஓடாதப்பா சோடகத்தில் சீவகளை இருப்புமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar