போகர் சப்தகாண்டம் 1546 - 1550 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1546 - 1550 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1546. புதைத்துமே மண்டலஞ்சென்றெடுத்துப்பாரு புகழான கஸ்தூரியென்ன சொல்வேன்
சிதைத்துமே ஜலந்தனிலே போட்டுப்பார்த்தால் சிறப்பான ரத்தமது போலேயோடும்
கதைத்துடனே சன்னிக்குக் காலனாகும் கடிதான வைப்புமல்லோ சீனவைப்பு
விதைத்துடனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வோம் விரைவுடனே கேட்பவருக்கு யினஞ்சொல்வேனே

விளக்கவுரை :


1547. சொல்லுதற்கு நாவுமில்லை யாவுமில்லை துரைகோடி முறைகோடி தொந்தங்கோடி
வெள்ளுதற்கு காண்டாவின் மிருகமப்பா வெழிலான வுதிரமது படிதானெட்டு
கொல்லுதற்குக் கருங்காலி பட்டைதானும் குணமான காசியென்ற கட்டிதானும்
புல்லுதற்கு கிராம்புடனே யேலந்தானும் புகழான கெவுரியையும் சரியாய்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

1548. கூட்டவே நாற்சாமமரைத்துமேதான் குணமான சாடியென்ற பாண்டத்துள்ளே
மாட்டவே முதற்றிரமாம் பன்னீர்தானும் மயங்காமல் நிறையவிட்டு தாளிக்கேற்றி
தீட்டவே சீலையது மேலேசெய்து திட்டமுடன் யெரித்திடுவாய் மூன்றுநாளும்
நீட்டமுடன் சரக்கெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து நேர்ப்பாக வுதிரமுடன் கட்டிப்போமே

விளக்கவுரை :


1549. போமேதான் பாண்டமது திறந்துபார்க்க பொங்கமுடன் சீனமது வைப்புமார்க்கம்
ஆமேதான் சரக்கினிட வேகமெத்த மப்பனே நாசிதனில்முகரும்போது   
வேமேதான் வுதிரமது கலக்கங்காணும் வாரைவான சூடதுதான் கபாலத்தோடும்
போமேதான் கஸ்தூரி யென்னசொல்வேன் புகல்வரோ சித்தர்முனி சொல்லார்தாமே

விளக்கவுரை :


1550. தாமேதான் போகரிஷிசொன்னமார்க்கம் தப்பாது வொருக்காலும் முறைபொய்யாது
வேமேதான் வேணபடி சித்தர்தாமும் வெகுவெகுவாய்ப் பாடிவிட்டார் நூல்கள்தோறும்
நாமேதான் காலாங்கிநாதர்பாதம் நற்கமலந்தாள்வணங்கி வடியஆன்தானும்
போமேதான் பிசகொன்று நேரிடாமல் பூதலத்தில் பிழைக்கவென்று பூட்டினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar