போகர் சப்தகாண்டம் 1541 - 1545 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1541 - 1545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1541. தானான சூடனது பலமேவொன்று தாக்கான சீனமது பலமோகால்தான்
வேனான சாம்பிராணி பலமோகால்தான் மூக்கான மதியுப்பு பலமோகால்தான்
பானான பூநீறு பலமோகால்தான் பாங்கான தாழையுப்பு பலமோகால்தான்
கோனான கோரையுட கிழங்குதானும் குணமான வாடையென்ற  காறமாமே

விளக்கவுரை :


1542. காரமாங் கஸ்தூரி மஞ்சள்தானும் கருவான ஏலக்காய் தன்னோடொக்க   
வீரமா மிலாக்காயின் சந்தனந்தான் விரைவான கிளியூறல்பட்டைதானும்
கோரமாம் பச்சலைக்கிச்சிலிதான் கூட்டி கோமகனே கவனமுடன் வராகன்சேரு
தீரமாம் ஆவினுட நெய்யில்தானும் தீர்க்கமுடன் தானெரிப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :

[ads-post]

1543. எட்டான சாமமது வரைத்தபோது யெழிலான மெழுகதுபோலாகும்பாரு
வட்டான பீங்கானுக்கைள்ளேபோட்டு வளமுடனே மேல்பீங்கான் புனுகுபூசி
திட்டான சட்டிதனில் மணல்தான்கொட்டி திறமுடனன பூங்கானும் நடுவேவைத்து
மட்டான மணலதனைமேலேகொட்டி மார்க்கமுடன் தானெரிப்பாய் சாமமொன்றே

விளக்கவுரை :


1544. ஒன்றான சாமமது யெரிந்தபோது வுத்தமே மேற்பதங்க நின்றுமேதான்   
குன்றான பீங்கான்மேல் தேங்காய்ப்போல பிறைபோல வொளிவதுவாயேறிநிற்கும்
தன்றான தகடதுதான் வெளியிற்காட்டும் தயவான பூரமது பச்சைப்பூரம் 
பன்றான ராசர்களுக்குகந்த பூரம் பாரினிலே சித்தர்செய்யும்பூரமாமே

விளக்கவுரை :


1545. பூரமா மின்னமொரு வைப்புகேளு போக்கான ரத்தமென்ற யாளந்தானும்
வீரமாம் வேங்கைமரப்பிசினுங்கூட்டி விகற்பமுடன் பழந்தின்னும் வௌவாளெச்சம்
காரமாங் கலைமானின் ரத்தத்தாட்டி கசகாமல் தாழைமலர் கவசஞ்செய்து
தீரமாஞ்சட்டிக்குள் பொதிந்துமூடி திட்டமுடன் பூமிதனில் புதைத்திடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar