போகர் சப்தகாண்டம் 1536 - 1540 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1536 - 1540 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1536. சென்றமே யவர்களிடஞ் சிறக்கவேதான் சீரான மத்ததனைக்கணிதமிட்டு
குன்றைபோல் திரவியங்கள் மிகவும்பெற்று கோடானகோடி மரியாதைபூண்டு
நின்றமே யவர்களிடம் விடைகள்பெற்று நீணிலத்தில் நீயமொரு வரசனாவாய்
நன்றுமே காலாங்கி நாதர்பாதம் நலமுடனே யான்வணங்கி பாடினேனே 

விளக்கவுரை :


1537. பாடியே தளமென்ன கெம்புராசி பழுதுள்ள காய்ச்சக்கள் தன்னிலொப்பாய்
ஆடியே சேரொன்று வாங்கி மைந்தா அழகான குருந்தக்கல் நாலிலொன்று
தேடியே கட்டினதோர் காரமொன்று தெளிவான பூநீறு நாலிலொன்று   
கூடியே வறுவகை ஜெயநீர்தன்னால் குணமுடனே தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :

[ads-post]

1538. நலமான சாமமது மரைத்துமைந்தா நலமுடனே மூசையிட்டு சீலைசெய்து
காலான ரவிதனிலே காயவைத்துக் களிப்புடனே வுலையிலிட்டு வூதித்தீரு
சேவான சரக்கதுவும் ஒன்றாய்ச்சேர்த்து செழிப்புடனே தானுருகி சிவப்புமெத்த
பாலான முகம்விட்டு கண்விட்டாடும் பாலகனே கருக்கட்டி வார்த்திடாயே

விளக்கவுரை :


1539. வார்க்கவென்றால் சிறுகருவாம் பொடியாய்ச்செய்து வளமாகத் தானெடுத்து வார்ப்பாயானால்
தீர்க்கமுடன் மணிபோல விறுகிக்கட்டும் திறமான செப்பினுட வலுவுகாணும் 
பார்க்கவே வேண்டுமென்றால் அதீதமெத்த பாரினிலே சித்தர்செய்யும் வேதைமார்க்கம்
சேர்க்கவே படிகமென்ற சானைதன்னில் சிறப்புடனே தான்கொடுக்க வொளிகாணுமே

விளக்கவுரை :


1540. ஒளிவான கெம்பினுட மகிமைமெத்த ஓகோகோ வுலகுதன்னில் செய்வாருண்டோ
தெளிவான கெம்பெடுத்து ராஜர்மார்க்கம்சென்று வெகுமதிப்புடனே லாபங்காணீர்
நெளிவான வித்தையிது யாருஞ்சொல்லார் நீணிலத்தில் மாணாக்கள் பிழைக்கவென்று
கனிவுடனே காலாங்கிதன்னைப்போற்றி கருவாகப் பாடிவிட்டேன் போகர்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar