1531. நன்றான ரீங்கார மோங்காரத்தை
நலமுடனே வஷ்டதிசை வாசல்போடு
குன்றான வயிரவனை
முன்னேவைத்து கூறுவாய் யங்சிங்வங் கென்றேயோது
பன்றான சதுர்வாசல் தூபதீபம்
பாகுடனே பாணக்கம் பகுந்தவன்னம்
வன்றான வுருதானும் லட்சமோது
வயிரவனார் பூசையது வகுத்தவாறே
விளக்கவுரை :
1532. வாரான வாதமது முடிந்தாரானால்
வளமுடனே வயிரவன் பூசைவேண்டும்
சீரான தங்கமது பலிக்கும்பாரு
ஜெகத்தினிலே சித்தர்களுஞ் செய்வாரப்பா
கூரான புத்தியுடன்
குருபதத்தை கொப்பனவே தான்வணங்கி நிற்கவேண்டும்
காரான காலாங்கி நாதர்பாதம்
கடாட்சித்துத் தொழுகவென்று பாடினேனே
விளக்கவுரை :
[ads-post]
1533. பாடினேன் முத்துயென்ற வைப்புசொல்வேன் பாங்குபெற மாணாக்கள் பிழைக்கவென்று
தேடியே முத்தினுட
சிப்பினோட்டை தெளிவான வெண்மைநிறம் போன்றதாக
கூடியே ஒருசேருதானெடுத்துக்
குடிலமுடன் தானிடித்து பிழிந்துகொண்டு
ஆடியே நவநீதம் வெண்ணைப்போல
அப்பனே தானெடுத்து வளமைசெய்யே
விளக்கவுரை :
1534. வளமையென்ன சொல்லவென்றால்
பயணங்கேளு வாகான நீதமுடன் குடோரிகாரம்
பளமையாம் கட்டினதோர்
காரந்தானும் படிகமாம் சீனமென்ற பதியினுப்பு
மளமையாமிதுவெல்லாஞ்
சரியாய்க்கூட்டி மார்க்கமுடன் மூசையிட்டு சீலைசெய்து
தளமையா யுலையிலிட்டு
வுருக்கிப்பாரு தளுக்கான முத்துபோல் வெளுக்கும்பாரே
விளக்கவுரை :
1535. வெளுப்பான மத்ததனை யுடைத்துப்பாரு
வெகுளாமல் சிறுமணியாங் கருவுகட்டி
பளுக்கான மூசையிட்டு
வுருக்கித்தீரு பாலகனே கருக்களிலே துவாரமிட்டு
சுளுக்கான கருக்களிலே
வார்ப்பாயானால் சூட்சமுடன் முத்ததுவும் பாய்ந்துநிற்கும்
தளுக்கான முத்ததனை
யெடுத்துக்கொண்டு தண்மைபெற ராஜரிடம் சென்றுபாரே
விளக்கவுரை :

