1526. சாரமென்ற ஜெயநீரி
லரைத்துமைந்தா சாங்கமுடன் நாகத்துக் கங்கிபூட்டி
காரமென்ற சுண்ணாம்புச்
சீலைசெய்து கருத்துடனே ரவிதனிலே காயவைத்து
ஈரமென்ற சீலையது
காய்ந்தபின்பு யென்மகனே கோழியென்ற புடத்தைப்போடு
பாரமென்ற கண்ணதுவும்
நீங்கியேதான் பளபளத்த வெள்ளியது வாகுந்தானே
விளக்கவுரை :
1527. தானான வெள்ளியது
சிவத்துக்கொப்பாம் சங்கரனார்பூசைக்குகந்த வெள்ளி
கோனான வெள்ளிதனை
கடையில்மாற்றி கொப்பனவே பூசையர்ச்சனைகள் செய்வாய்
பானான பரங்களுக்கு
வன்னமீவாய் பட்சமுடன் கோயில்குளம் கட்டவேண்டும்
வேனான வந்தணராம்
குருக்கள்மார்க்கு வேணவுசாரமது செய்யநன்றே
விளக்கவுரை :
[ads-post]
1528. செய்யவே திரிவாமி
பூசைவேண்டும் சிறப்பான மனோன்மணியை நணுகவேண்டும்
பையவே சத்தியட பூசைவேண்டும்
பாருலகில் தேவதைகள் வணக்கம்வேண்டும்
முய்யவே சதாநித்தம்
போற்றிசெய்து மோட்சத்திற்கேகும்வழி தேடவேண்டும்
மையவே காலாங்கரதனை நினைந்து
மண்டலத்தில் வாழ்பவனே யோகவானே
விளக்கவுரை :
1529. யோகமென்றால்
யோகமதுசொல்லப்போமோ யொளியான வயிரவன்தன் பூசைசொல்வேன்
போகனென்னு மடியேனும்
தாள்வணங்கி பொங்கமுடன் காலாங்கிநாதர்பாதம்
வேகமுடன் தாள்பணிந்து
வணங்கிநின்று வேதாந்த தாயினது அருளும்பெற்று
சாலமுடன் நவகோண வாசலிட்டு
சாந்தமுடன் கலசமது வைத்திடாயே
விளக்கவுரை :
1530. வைத்திடவே கலசமது நூலேசுற்றி
யாருடனே தேங்காயை மேலேவைத்து
கைத்திடவே மாவிலையை
கவசம்பூண்டு கலசத்தின் கீழுநவதானியங்கள்
மெய்த்திடவே தான்பரப்பி
கலசம்வைத்து மேன்னையுடன் கலசமது யெதிர்நேராக
பைத்திடவே மஞ்சளென்ற
பிள்ளையாரை பக்குவமாய் எதிர்வாசல் வைக்கநன்றே
விளக்கவுரை :

