போகர் சப்தகாண்டம் 1521 - 1525 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1521 - 1525 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1521. ஆகாது காலாங்கிநாதர் தாமும் அவருடைய சீர்பாத கிருபையாலே
போகாத தேசமெல்லாங் குளிகைபூண்டு போனேனே சேரசோழபாண்டிநாடு
சாகாத சித்தர்முனி யென்றுசொல்லி சமாதிலே யிரப்பேனென்றுசொன்ன மாந்தர்தம்மை
வேகாதவெயில்தனிலே தவசிருந்த வேணசித்து பொய்ஞ்ஞானி கண்டிட்டேனே

விளக்கவுரை :


1522. கண்டிட்டே னவர்களிடம் வாதுபேசி கருவான மறைப்புமுதல் திறப்புங்கேட்டேன்
விண்டிட்ட சாத்திங்கள் கற்றோர்போல வீண்வார்த்தை பேசியல்லோ பொய்யேசொன்னார்
தண்டிட்டு வவர்களிடம் துஞ்சிப்பேசி தூரான மாராட்டப் பேச்சரிந்து
பண்டிட்ட சீனபதிவந்துசேர்ந்து பலபலவாம் வித்தைகளைக் கற்பித்தேனே

விளக்கவுரை :

[ads-post]

1523. கற்பித்த வித்தைகளும் கணக்கேயில்லை கால்மாடுதலைமாடு பரட்டார்மாண்பர்
துற்புத்தி சற்றேனுமில்லா பாலர் துறைமுகமும் ஒருமுகங்கண்டதில்லை
விற்புத்தி யானதொருமாண்பரப்பா விண்ணுலகில் சீனபதிக்கிணையாமோதான்
சற்புத்தியுடையதொரு சித்தர்க்கொப்பாய சாற்றலாஞ் சீனபதி தேசத்தோரே

விளக்கவுரை :


1524. தேசமென்றால் தேசமதுசீனமாமோ ஜெகத்திலே கண்டவர்கள் யாருமில்லை
பாசமென்றால் பிரம்மத்தின் பாசமாகும் பாருலகில் சதாநித்தம் தொழுவார்மாந்தர்
நேசமென்றால் போகரிஷிதன்னைப்போற்றி நெடுங்காலஞ் சமாதியிலே யிருந்தார்கோடி
வாசமுடன் சீனபதி யாவுங்கண்டேன் வளமாக மாந்தருட வுண்மைபாரே
விளக்கவுரை :


1525. வண்மையா மின்னமொரு கருமானங்கேள் வுத்தமனே மாணாக்கள் பிழைக்கவென்று
தண்மையாம் நாகமது சேர்தானொன்று தாக்கான பாஷாணம் சேர்தானொன்று
கண்மையாஞ் சுண்ணாம்புஞ் சேர்தான்பாதி கருவான மதியுப்பு சேர்தான்காலாம்
நன்மையா மித்தனையு மொன்றாய்ச்சேர்த்து நலம்பெறவே சிப்பியென்ற சாரத்தாட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar