1516. பூணவே கைதனிலே
மாத்திரைக்கோலும் புகழான நெற்றிதனி லைங்கோலமையும்
நாணவே மானிடர்கள்
நடுங்கவென்று நாதாக்கள் மெச்சிடவே கச்சைபூண்டு
காணவே தலைதனில் கலசப்பானை
கடினமுடன் பத்தொன்று வொன்றோடொன்று
வூணவே பானைதனில் காந்தம்பூசி
வுத்தமனே கிடைதனிலே யேறலாமே
விளக்கவுரை :
1517. ஏறலாமுச்சிவரை கிடைமேல்நின்று ஏற்றமுடன் துத்தாரிவாயிலேந்தி
கூறலா மோடியென்ற வித்தைதன்னை
குவலயத்தில் மெச்சடவே போகர்தாமும்
தேறவே மேல்நின்று
காணந்தன்னில் திறமுடனே வாசியைத்தான் கீழ்நோக்காமல்
மாரவே பிரணவத்தைமாறி
மார்க்கமுடன் நின்றுவிளையாடினாரே
விளக்கவுரை :
[ads-post]
1518. ஆடினார் சீனமென்ற
தேசந்தன்னில் அன்புடனே மாணாக்கள் பிழைக்கவென்று
பாடினார் சித்தர்முனி
சொன்னநூலைப் பரிவாகத் தானெடுத்து பாருவோர்க்கு
மூடினதோர் வுளமெல்லாம்
மிகவேபார்த்து முயற்சியுடன் வெளியங்கமாகச்செய்தேன்
கூடினதோர் கருமான மெல்லாந்
தேர்ந்து குறிகண்டு நிலைகண்டார் சீனத்தாரே
விளக்கவுரை :
1519. சீனபதி மானிடர்கள்
செய்யுமார்க்கம் சித்தர்முனி ரிஷிதேவர் முறைககளாகும்
மானபதிமாண்பர் கருவாளியல்லோ
மண்டலத்திலாருமில்லை பேருமில்லை
தானமுடன் கொச்சியென்ற
மார்க்கத்தாரும் சட்டமுடன் செய்வார்க ளிவர்போல
மோனமுடன் தேவதா ரிஷிக்கொப்பாவார்
மண்டலத்தில் சீனபதிமாந்தர்தாமே
விளக்கவுரை :
1520. தாமேதான் சத்தியங்களுண்டு
தரணிதனில் பொய்சொல்வார் மாண்பர்தாமும்
வேமேதான் நீதிமனுமுறைகளுண்டு
வெகுகோடி வத்தைகளுஞ்செய்வாரப்பா
போமேதான் பொய்யொன்றஞ்
சொல்லமாட்டார் பொன்னுலகுக் கொப்பான மாந்தரப்பா
நாமேதான் கண்டபடி
சொன்னேனப்பா நாட்டினிலே சீனத்துக் கிணையாகாரே
விளக்கவுரை :

