போகர் சப்தகாண்டம் 1511 - 1515 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1511 - 1515 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1511. தங்கமுட னிடையாக வொன்றாய்க்கூட்டி தாழ்மையுடன் தானரைப்பாய் கையான்சாற்றால்
துங்கமுன் நாற்சாமமரைத்துத் துப்புரவாய்ப் பில்லைதட்டி காயவைத்து
பங்கமுடன் வாராமல் ஓட்டிலிட்டு பாங்குபெற சீலையது வலுவாய்ச் செய்து
அங்கமுடன கோழியென்ற புடத்தைப்போடு அப்பனே செந்தூர மாகுந்தானே

விளக்கவுரை :


1512. தானாக யிப்படியே பத்துபுடம்போடு தாக்கான மூலிகையா லரைத்துப்போடு
வேனாக செந்தூரம் வீரமெத்த வேதைக்கு வெகுதூரம் எட்டியோடும்
பானாக செந்தூரம் பதனம்பன்னு பத்துக்கு வொன்றுகுடு வெள்ளிசெம்பில்
மாணாகேள் கொடுத்திடவே வேதிக்கும்பார் மகத்தான மருந்தினுட போக்குதானே

விளக்கவுரை :

[ads-post]

1513. போக்கான செந்தூரங் குன்றியுண்ணு பொங்கமுடன் மண்டலந்தான் கொண்டாயானால்
தூக்கான தேகமது கற்றூணாகும் துலையாது வயதுமிக வதிதங்காணும்
நோக்கான நரைதிரையு மற்றுப்போகும் நோய்தானுஞ் சடந்தனிலே மேவலாகா
பாங்கான கண்ணுரண்டும் ஒளியேவீசும் பார்வைக்கு வருந்ததியுங் காணலாமே

விளக்கவுரை :


1514. காணலாம் சட்சத்திரம் பகற்காலத்தில் கருவிழியு மொருக்காலுந் திரைதானில்லை
பூணலாம் தேகத்தை வுறுதிபண்ணு போக்கான சட்டையது தள்ளிப்பாரு
வேணலாம் வெகுகால மிருக்கலாகும் வேண்டியே சமநிலைக்கு சமாதிதேட
நீணளாம் வாசியது மேல்நோக்காது நீணிலத்தில் நீயமொரு சித்தனாமே

விளக்கவுரை :


1515. சித்தனாம் கெடையாட்டஞ் சொல்வேன்கேளு செழிப்பான துலாக்கோலா மூங்கிலொன்று
மத்தலாய் நூறடியாம் பருவநீட்ட முனையான கொப்புக்கு கயிர்தான்நாலு
சுத்தமாம் வெட்டார வெளியில்நின்று சுகமுடனே கால்நாட்டி பதுங்குமாட்டி
துத்தமுடன் முனைகிடையில் காந்தம்வைத்து துறையான விரும்பினுட சட்டைபூணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar