போகர் சப்தகாண்டம் 1506 - 1510 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1506 - 1510 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1506. நேர்மையாஞ் சாரமது கட்டிற்றானால் நெடுந்தூரம் வேதைமுகங்காணலாகும்
கூர்மையாம் சூதத்தைக் கொல்லும்காலன் கொடிதான சுன்னமதை செப்பவென்றால்
வார்மையாம் வுப்புக்குச் சத்துருவேயாகும் வாகான செந்தூரகோடிவேதை
மேர்மையாஞ் சித்தர்முனி செய்வாரப்பா மேதினியில் மற்றவரால் செய்யப்போமோ

விளக்கவுரை :


1507. போகுமே சாரமென்ற செந்தூரத்தை பொல்லாத வயிற்றுவலி குன்மத்தொக்கும்
ஏருமே வாயுவென்ற தெண்பதுக்கு மெழிலான சோகைகாமாலை யேற்கும்
பாகுமே சூதகத்தில் வாய்வுள்ளோர்க்கும் பாங்கான மகோதரமாம் பீலியோர்கும்
வாகுடனே தேன்திலே கொடுத்தாயானால் வளமான தேகமது கர்ப்பமாமே

விளக்கவுரை :

[ads-post]

1508. கற்பமா மின்னமொரு கருமானங்கேள் காசினியோர் பிழைக்கவென்று லகுவாய் சொல்வோம்
அற்பமென்று நினையாதே வன்பாகேளு அருங்காந்த மூசியென்ற தேழதாகும்
துற்பாவாய் பலமதுதான் கொண்டுவந்து துடியான வறுவகை ஜெயநீர்தன்னால்
சிற்பரம் போல்மெழுகாக்கி மூசையிட்டு சில்லிட்டு சீலையது வலுவாய்ச்செய்யே

விளக்கவுரை :


1509. வலுவாகச் செய்துமல்லோ ரவியில்வைத்து வாகுடனே தீமூட்டி புடத்தைப்போடு
சுலுவாம புடமதுதான் போட்டாயானால் சுறுக்கென்ற காந்தமது ஈயமாகும்
பளுவான யீயமது சொல்லப்போமோ பதந்தெரிந்து யெடுத்தவனே வாதியாவான்
மெழுகான காந்தமதூ யீயமானால் மேதினியில் வெகுகோடி வேதையாமே  

விளக்கவுரை :


1510. வேதையாங் காந்தமென்ற யீயந்தானும் வாரைவான கெந்தியிட சத்துதானும்
பாதையாம் நாகமென்ற சத்துதானும் பாங்கான வயத்தினுட சத்துதானும்
மேதையாம் பூநாகச்சத்துதானும் மிக்கான வப்பிரேகச் சத்துதானும்
தோகையுடன் தானெடுத்து வொன்றாய்க்கூட்டி தொந்தமுடன் தானெடையாய்த் தங்கஞ்சேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar