போகர் சப்தகாண்டம் 1501 - 1505 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1501 - 1505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1501. சித்தனாமின்னமொரு மார்க்கங்கேளு சிவப்பான சாரமது கட்டுசொல்வேன்
நித்தமுடன் காரமது வொன்றேயாகும் நிகரான சீனமது வொன்றேயாகும்
துத்தமுடன் பூநீறுவொன்றேயாகும் துடியான சிப்பியென்ற தண்ணந்தானும்
முத்தமுடன் சிப்பியுட ஜெயநீர்தன்னால் மூன்றுநாளரைத்து பாவகமேசெய்யே

விளக்கவுரை :


1502. செய்யவே மெழுக்காலே குகையுண்டாக்கி செழிப்புடனே சாரமதுக்கங்கிபூட்டி
நையவே சுண்ணாம்பு சீலைசெய்து நலம்பெறவே ரவிதனிலே காயவைத்து
முய்யவே முழப்புடந்தான் பூப்புடந்தான் முனையான மணல்தனிலே நடுவேவைத்து
பையவே மணலாலே மேலேமூடி பாங்குபெற தீமூட்டி போட்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

1503. போடவே தீயாறியெடுத்துப்பாரு பொங்கமுடன் சாரமது கட்டிப்போகும்
நீடவே முப்புமிப்படியேதீறு நிலையான சாரமது தந்தம்போலாம்
நீடவே சாரணைதான் சொல்லக்கேளாய் கொடிதான நாயுருவி சாம்பல்தன்னில்
மூடவே சாரமதை யுள்ளேவைத்து முழுகவே சாம்பலையும் மேலேபோடே

விளக்கவுரை :


1504. போடவே சட்டிதனில் பொதிந்துமூடி பொங்காமல் சீலையது வலுவாய்ச் செய்து
சூடவே தணல்மூட்டி மூன்றுநாளாய் சுகம்பெறவே தானெரிப்பாயஃ மைந்தாகேளு
தூடவே யாறினபின் னெடுத்துப்பாரு துடியான சாரமதுக் கிணைவேறுண்டோ
ஆடவே சாரமதை யென்னசொல்வேன் அப்பனே கருவாளி சொல்வான்பாரே

விளக்கவுரை :


1505. பாரேதான் சாரமது கட்டுமானால் படுமுன்னே சரக்கெல்லாம் கட்டிப்போடும்
நேரேதான் நாகமதை நொடியிற்கொல்லும் நேரான செம்பதுவு மூறல்போகும்
சீரேதான் சாரமது கட்டுமானால் சிறப்பான வீடுகளும் கட்டினாற்போல்
கூரேதான் சரக்குதான் காலனாகும் கொடிதான சாரத்தின் நேர்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar