போகர் சப்தகாண்டம் 1496 - 1500 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1496 - 1500 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1496. தாக்கவே பாஷாணம் புகையடங்கி சார்புடனே கட்டியது பொருமிக்கொல்லும்
நோக்கவே பூநீறு வுப்பெடுத்து நுணுக்கமுடன் தான்சேர்த்து கவசஞ்செய்து
போக்கவே ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் சுண்ணாம்புசீலைசெய்து
பார்க்கவே சட்டிதனில் மணல்தான்கொட்டிபாங்காக நடுமையம் வைத்திடாயே

விளக்கவுரை :


1497. வைத்துமே சட்டிகொண்டு மேலேமூடி வாகுடனே மண்சீலைவலுவாய்ச் செய்து
பொய்த்துமே போகாமல் வடுப்பிலேற்றி புகழாகத் தானெரிப்பாய் நாலுசாமம்
கைத்துமே யாறினபின் னெடுத்துப்பாரு கனமான பாஷாணம் முருக்கிக்கட்டும்
மெய்த்துமே கட்டினதோர் பாஷாணத்தில் மேன்மையுடன் வங்கமது காலாய்க்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

1498. கூட்டியே வங்கத்தோர் நிடைதானாகம் குமுறவே வறுவகைஜெயநீர்தன்னால்
தாட்டிகமாய் தானரைப்பாய் நாலுசாமம் சார்பாக பில்லைதட்டிக் காயவைத்து
நீட்டமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து நேர்பாக காடையென்ற புடத்தைப்போடு
வாட்டமுடன் கோழியென்ற புடந்தானாகும் மைந்தனே தீயாறியெடுத்துப்பாரே

விளக்கவுரை :


1499. எடுக்கவே பற்பமது என்னசொல்வேன் என்மைந்தா நாதாக்கள் செய்யும்வேதை
கொடுக்கவே செம்புதனில் கொடுத்துப்பாரு சொக்கமுள்ள வெள்ளியது கூறப்போமோ
மடுக்கவே பத்துக்கொன்று வெள்ளி மார்க்கமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
விடுக்கவே வுப்புக்குக் காய்ப்புண்டாகும் விபரமுடன் செய்யம் வழியறிந்துபாரே

விளக்கவுரை :


1500. பார்க்கவே நாதாக்கள் கைமறைப்பு கருவாளி கண்டறிவான் மற்றோர்காணார்
ஏர்க்கவே யவர்களிடம் தொண்டுசெய்து என்மகனேயவர்கள் மனங்களியவேண்டும்
பூர்க்கவே மனதுவந்து வுந்தனுக்கு புகழ்ச்சியுடன் வேதைமுகம் யாவுஞ்சொல்வார்
தீர்க்கவே சாத்திரங்களுமுரைப்பார் தீர்க்கமுட னறிபவனே சித்தனாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar