போகர் சப்தகாண்டம் 1491 - 1495 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1491 - 1495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1491. எட்டான மாற்றதுவுமென்ன சொல்வேன் பெருவான பசுமையது மிகவேகாட்டும்
நாட்டான சூதமது லெகுவிலோடும் கசடகற்றி மாற்றதுவுங் காணலாகும்
மாட்டான பொன்னதுவில் நாலுக்கொன்று மாட்டடா தங்கமது ஒன்றுகூட்டு
திட்டான வாரடித்துப் புடத்தைப்போடு திகழான பசுந்தங்கம் சொல்லப்போமோ

விளக்கவுரை :


1492. சொல்லவென்றால் நாவில்லை பாவமில்லை சூட்சாதிசூட்சமெல்லாம் சூதத்தாட்டு
மெல்லவே ஜீவனத்தைசெய்துகொண்டு மேதினியில் யோகத்துக்குருதிபாரு
வல்லவே ஞானத்தைமிகவே வுன்னிவழியான முனைமூலத்துள்ளேபுக்கி
கொல்லவே ஓங்காரமுள்ளடக்கி குறிப்புடனே சமாதிநிலை யறிந்துபோற்றே

விளக்கவுரை :

[ads-post]

1493. போற்றவே சிகாரத்தின் மீதிருந்து பொலிவாக மகாரத்தை யுன்னிப்பாரு
ஆற்றவே வகாரமா மனாதிபீடம் அப்பனே நகாரமாம் பிரம்மபீடம்
தூற்றவே யகாரமாம் லட்சுமிபீடம் துலையாத கர்மேந்திரியம் ஐந்துக்குள்ளே
மாற்றவே மனோலயத்தை மருவிப்பாரு மகத்தான நாதாக்க ளாடுங்கூத்தே

விளக்கவுரை :


1494. கூத்தான பஞ்சகர்த்தா ளாடுங்கூத்து குடியான வீட்டுக்குள் ஐந்துபேராம்
காத்தான வாசலது வொண்பதாகும் கருவிகாணாதிமுதல் பொந்துக்குள்ளே
மாத்தானும் வந்தவுடன் சாமிபூணும் மகத்தாக திரேகமது பொய்யாம்பாரு
ஆத்தாளை வணங்கி மிகவனுசித்து அப்பனே சாயுச்சிப் பதத்தைத்தேடே

விளக்கவுரை :


1495. தேடையிலே மின்னமொரு மார்க்கங்கேளு வெளியான வெள்ளிவித்தை யார்தான்காண்பார்
வாடையுள்ள பாஷாணம் பலமொன்றாகும் வகுப்பான கோழஇயென்ற மூலிதானும்
மேடையிலேதான் விலையும் மூலியப்பா மேன்மையுடன் கொண்டுவந்து சாற்றைவாங்கி
ஆடையிலேதான் பிழிந்து மைந்தாகேளு அப்பனே நாற்சாமம் சுருக்குதாக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar