போகர் சப்தகாண்டம் 1486 - 1490 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1486 - 1490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1486. கண்டபின்பு சமாதிக்கி நிலையைப்பாரு காலாங்கி வையரதம்மை கருத்திலுண்ணி
அண்டரண்டம் தான்புகழு மெந்தனையருளிருந்தால் கதிபெறலாமன்பர்கேளு
தொண்டுசெய்து சித்தர்களை வணங்கிநித்தம் தொடர்ந்துமே யவரிடத்தில் பத்திவைத்தால்
விண்டுபகழ் மாலயனார் கிருபையாலே விட்டகுறை வயந்தனுக்கு வாய்க்குந்தானே

விளக்கவுரை :


1487. வாய்க்கவே வின்னமொரு கருமானங்கேள் வளமான துருசுவொரு கட்டிவாங்கி
காய்க்கவே பொன்வேண்டுமானால் அப்பாகணக்காக வெடியுப்பு சரிநேராக
மாய்க்கவே பூநீறுசரியோடொக்க மார்க்கமுடன் தான்கூட்டி யரைப்பாய் நீதான்
தோய்க்கவே வறுவகை ஜெயநீர்தன்னால் துப்புரவாய் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :

[ads-post]

1488. நாலான சாமமது தானரைத்து நலமாகப் பில்லைதட்டிக் காயவைத்து
மாலான புடம்போடப் பற்பமாகும் மகத்தான துருசினிட பச்சைநீங்கி 
சேலான வெளுப்புநிற மதிகங்காட்டும் செழிப்பான பற்பமது சிவந்துபோனால்
காவான மின்னமொரு புடந்தான்போட்டு களிப்புடனே தானரைப்பாய் ஜெயநீராலே

விளக்கவுரை :


1489. ஜெயநீரை விட்டுமல்லோ யரைப்பாய்சாமம் சிறப்புடனே பில்லைதட்டிக் காயவைத்து
நயமுடனே ஓட்டிலிட்டு சீலைசெய்து நன்றாக ரவிதனிலே காயவைத்து
பயமுடனே தீமூட்டி புடத்தைப்போடு பக்குவமா யாறினபின் னெடுத்துப்பாரு
மயமுடைய பற்பமது யென்னசொல்வேன் மாணாக்கள் பிழைக்கவென்று மதிப்பிட்டேனே

விளக்கவுரை :


1490. மதிக்கவே பற்பமது நேரேசூதம் மாட்டடாகுக்கல்லில் ஜெயநீராலே
கதிக்கவே தானரைப்பாய் நாலுசாமம் தண்மைபெற மூசையிட்டு புடத்தைப்போடு
விதிக்கவே புமாறியெடுத்துப்பாரு வீரியமாம் பற்பமது காரமெத்த
துதிப்புடனே வெள்ளிதனில் பத்துக்கொன்று துறைபார்த்துக் கொடுத்துப்பார் மாற்றெட்டாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar