போகர் சப்தகாண்டம் 1481 - 1485 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1481 - 1485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1481. வண்மையா மின்மொரு மார்க்கங்கேளு வளமான வங்கமொரு பலமேதூக்கு
திண்மையாந் தாளகமும் பாஷாணந்தான் திறமான சவுக்காரச் சாரந்தானும்
உண்மையாம் பூநீறு கிளிஞ்சிற்சுண்ணாம்பு வுத்தமனே வகைக்கொரு பலமும்தூக்கு
நன்மையாங் கல்வத்திலாட்டியேதான் நலமாபெறவே கலசமென்ற குடுவைவாங்கே

விளக்கவுரை :


1482. வாங்கியே முன்னரைத்த சரக்கையெல்லாம் மார்க்கமுடன் கலசத்தினுள்ளேபோட்டு
தேங்கியே திரியாதே மைந்தாகேளு தெளிவான வங்கமதை சரக்கில்போட்டு
ஓங்கியே சில்லிட்டு சீலைசெய்து வுத்தமனே கோழியென்ற புடத்தைப்போடு
தூங்கியே திரியாதே மைந்தாபாரு துடியான களங்குபோ லிருக்கும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1483. களங்கான வங்கமது வொன்றேயாகும் கடிதான வெள்ளியது வொன்றேயாகும்
குளங்கான சூதமது ரண்டேயாகும் கொடிதான சாரமது காலேயாகும்
பளங்கான மதிஜெயநீர் தன்னாலாட்டி பாங்குபெற வில்லையது லேசாய்தட்டி
முளங்கான ரவிதனிலே காயப்போடு உத்தமனே ஓட்டிலிட்டு சீலைசெய்யே

விளக்கவுரை :


1484. செய்யவே காடையென்ற புடத்தைப்போடு சேரவே வோடதுதான் குளிர்ந்தபின்பு
வையவே தானெடுத்துப் பார்க்கும்போது பாங்கான பற்பமது சொல்லப்போமோ
வெய்யவே ரவிதனிலே பத்துக்கொன்று விதமுடறானுருக்கிக் கொடுக்கும்போது
துய்யவே தய்யானுக் கொப்பதாகும் துரைராசர் மெச்சுகின்ற மதியமாமே

விளக்கவுரை :


1485. மதியான வெள்ளிதனில் பத்துக்கொன்று மாற்கமுடன் தான்சேர்த்து வங்கத்தூது
நிதியான வெள்ளியது துய்யரூபாய் நிகரில்லை மாற்றில்லை கணக்குமில்லை
பதியான பதிதனிலே நின்றுகொண்டு பட்சமுடன் திரிபுரியை பணிந்துபோற்றி
துதியான வாலைதனை வணங்கிநித்தம் சூட்சமுட னிறங்குநிலை கண்டிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar