போகர் சப்தகாண்டம் 1476 - 1480 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1476 - 1480 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1476. தானான சித்தர்முனி இருப்பிடங்கள் தாக்கான சமாதிமுத லெல்லாம்பார்த்து 
கோனான கவரவர்கள் செய்தநூலை குகைதனிலே மறைத்துவைத்த கருவையெல்லாம்
பானாக சித்தரிடம் வாதுபேசி பழிபோட்டு சாத்திரங்க ளனைத்தும்பெற்றேன்
மானாக மறைத்துவைத்த நுட்பமெல்லாம் மதிப்புடனே யாராய்ந்து நூல்செய்தேனே

விளக்கவுரை :


1477. செய்தேனே பெருநூலேழாயிரந்தான் செப்பினேன் போகரிஷிசத்தகாண்டம்
செய்தேனே நாதாக்களுளவைப்பார்த்து திறட்டினேன் குருநூலாய் காவியந்தான்
செய்தேனே நூலினிடை வண்மைபார்த்து சீறியே சித்தரெல்லாம் சினந்தாரென்னை
செய்தேனே லோகமெல்லாம் சித்தாச்சென்று சித்தரெல்லா மெனைசபிக்க வந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

1478. வந்திட்டார் கோடான கோடிபேர்கள் வரைகோடி துரைகோடி தொந்தங்கோடி 
நொந்திட்டு சித்தரகளை செய்தேனென்று நொடிக்குள்ளே எனைக்கொல்ல வந்தாரையா
முந்திட்டு யான்பயந்து காலாங்கிதன்னை முறையமிட ரெனதையர் கிருபையாலே
தந்திட்ட சாபமதை நிவர்த்திசெய்து தாரணியில் பிழையென்று யெனைவிட்டாரே

விளக்கவுரை :


1479. விட்டவுடன் யானுமல்லோ சீனதேசம் போயிருந்து கமலர்தன்னைச்
சட்டமுடன் சமாதியிலே யிருந்தாரங்கே சார்புடனே யவர்பாதம் தொழுதிட்டேதான்
இட்டமுடன் யானுமல்லோ சீனதேசம் யின்பமுடன் காணவென்று குளிகைபூண்டு
சட்டமுடன் யான்வந்தேன் என்றுசொல்லிக் கமலமுனிதன்பாதந் தொழுதிட்டேனே

விளக்கவுரை :


1480. தொழுதிட்ட யெந்தனுக்கு முனிதான்சொன்னார் தொல்லுலகில் நீர்கற்றவித்தைதன்னை
பழுத்திட்ட மில்லாமல் சீனந்தன்னில் பட்சமுடன் மாணாக்கள்பிழைக்கவென்று
முழுதிட்டந் தன்னுடனே முனிதானசொல்ல முயற்சியுடன் கற்றவித்தை பழுதில்லாமல்
வழுதிட்டமுடன் றானுமறைப்பையெல்லா மானிடத்தில் கொட்டிவிட்டென் வண்மைபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar