போகர் சப்தகாண்டம் 1471 - 1475 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1471 - 1475 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1471. சாய்க்கவே வெள்வங்கம் வெள்ளயாகும் சாங்கமுடன் பத்துக்கு ரண்டுவெள்ளி
மாய்க்கவே தானுருக்கு மகத்தாம்வேதை மானிலத்தில் சொல்லுவறோ சித்தர்தாமும்
காய்க்கவே பொன்வேண்டுமென்றாயானால் கருவாக வெந்நூலைப்பாரு  
ஏய்க்குமே பின்னொருநூலானாலும் என்போலும் யாருரைப்பார் சித்தர்தாமே

விளக்கவுரை :


1472. சித்தான சித்தர்முனி யார்தான்சொல்வார் சிறந்தசிவ யோகியருஞ்சொல்லமாட்டார்
முத்தான சாத்திரங்க ளனேகமுண்டு முன்பின்னாய் பாடிவிட்டார் சித்தர்தாமும்
பத்தான வழியுரையுங்காணார் மாண்பர் பாழாகிக் கட்டலைந்து கெட்டலைந்து
தெத்தான பித்தமது வதிகமாகித் தெருதெருவாய்த் திரிவார்கள் மடையர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

1473. மடையறாமானவர்கள் நூலைப்பாரார் மாறாட்டமாகவே கெடுத்தாரென்று
நடையான நூல்வழிக ளறியாமற்றான் நாதாக்கள் கைமறைப்பு யார்தான்காண்பர்
மடைபோல பேசவல்லார் நூலைப்பாறார் மதிகுலைந்து நினைவழிந்து வறிவுகெட்டு
கடையான சாத்திரங்கள் மிகவும்பார்த்து கருத்தெரியா மானிடர்கள் மெத்தவாமே

விளக்கவுரை :


1474. மெத்தவுண்டு முழுமடையர் என்னசொல்வார் முனையான சாத்திரங்கள் மிகப்பாறாமல்
சுத்தமுடன் ரஇஷிமுனிவர் சொன்னநூலை சூட்சாதிசூட்சங் காணாமற்றான்
பத்தரென்ன சித்தர்களை மெத்தப்பேசி பலபலவாய் சாத்திரத்தை மறைப்புசெய்வார்
குத்தமென்று திட்டியல்லோ சாபந்தன்னை குவலயத்தில் தேடிக்கொள்ளு மாண்பராமே

விளக்கவுரை :


1475. வெளியான சாத்திரங்க ளனைத்துங்கண்டேன் வேதாந்தத் தாயினது வருளினாலே
ஒளியான காலாங்கி கடாட்சந்தன்னால் ஒளித்திருந்த சாத்திரங்கள் கைமறைப்பை
தெளிவாக மானிடர்கள் பிழைக்கவென்று தேசதேசங்கள்முதல் குளிகைபூண்டு
நெளிவான மலைகுகைகள் வனாந்திரங்கள் நேர்ப்புடனே குளிகையிட்டு பறந்தேன்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar