போகர் சப்தகாண்டம் 1466 - 1470 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1466 - 1470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1466. நன்றான வர்ச்சனைகள் யாவுந்தேர்ந்து நாதாக்கள் பூசிக்கும் நிலையைப்பார்த்து
குன்றான பிராணாயந்தன்னிற்சென்று கொடிதான காமத்தை நிவர்த்திசெய்து
பன்றான பரபூசை சிவபூசையாவும் பாங்கான ஞானத்தின் சுடலைத்தாண்டி
வன்றான மாயசமு சாகரத்தை மறந்தவனே சித்தரிலினி லொருவனாமே

விளக்கவுரை :


1467. ஆமப்பா வின்னமொரு கருமானங்கேள் அப்பனே சங்குயென்ற பாஷாணந்தான்
தாமப்பா திருகள்ளி பாலைவாங்கி தப்பாமற்றான்சுருக்கு சாமம்நாலு
வேமப்பா கொடுத்தவுடன் கட்டிப்போகும் வேகமுடன் கடுஞ்சுருக்கு சொல்லப்போமோ
நாமப்பா மெழுகுவகை போக்குசொல்வோம் நாதாக்கள்மறைப்பையெல்லாம் நவில்வேண்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1468. நவிலவே யானையென்னு விலாங்குதன்னை நாட்டமுடன் காரமிட்டுத் தயிலமாக்கி
குவிலவே சிற்றண்ட மஞ்சள்தானும் கூடவேதான்கூட்டி கலந்துகொண்டு
கவிலவே சங்கென்ற பாஷாணத்தை கருவாக ஓட்டிலிட்டு சுருக்குதாக்கு
புல்லவே மெழுகாகும் பாஷாணந்தான் நாட்டினார் லோகத்து மாந்தர்க்காமே

விளக்கவுரை :


1469. ஆமேதான் மெழுகெடுத்து ரவியில்தாக்கு அப்பனே பத்துக்கு ஒன்றுபோடு
தாமேதான் ரவிதானும் வெளுத்துக்காணும் தரித்தலே யெடைக்கிடைதான் வெள்ளிசேர்த்து
நாமேதான் சொன்னபடி வங்கஞ்சார நயமாகவெள்ளியது வலுத்துப்போச்சு
போமேதான் திராவகத்துக்குயிருமாச்சு போக்கான செம்பதுவும் கட்டிப்போச்சே

விளக்கவுரை :


1470. போச்சென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் மெழுகெடுத்து வெள்ளீயத்தில்
பாச்சவே பத்துக்கு ஒன்றுதாக்கு பதமுடனே நீரதுவும் நீங்கிப்போகும்
மூச்சொன்று விடுகாதே யின்னங்கேளு முக்கியமாய் மேற்சொன்ன வெள்ளீயத்தை
காச்சுடனே வறுவகைஜெயநீர்தன்னில் களிப்புடனே மூன்றுமுறை வுருக்கிச்சாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar