போகர் சப்தகாண்டம் 1461 - 1465 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1461 - 1465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1461. பொன்னான மட்டமுடன் நாலுக்கொன்று பொலிவான தங்கமது வொன்றுசேர்க்க
மன்னானமன்னர்மெச்சும் பொன்னேயாச்சு மகத்தான வேதையிது சித்தர்வேதை
வன்னான ரிஷிமுனிவர் செய்யும்வேதை வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
தென்னானா னுங்களுக்குத் தெளிவாகத்தான் பாடிவைத்தேன் தெளிவைப்பாரே

விளக்கவுரை :


1462. தெளிவான வாதவித்தை வதீதமெத்த தேசத்தில்கிட்டாது சிவயோகிக்கு 
ஒளிவான சித்தரெல்லாம் மறைத்துவைத்தார் ஓகோகோநாதாக்கள் சூதார்கண்டார்
நெளிவான சாத்திரத்தின் மறைப்புமார்க்கம் நேர்மையட நானுரைத்த பாவனைப்போல்
வழியாகச் சொன்னவர்க ளாருமில்லை வையகத்தில் போகரைப்போ லாவார்தானே

விளக்கவுரை :

[ads-post]

1463. தானான பிரமவித்தை யறியவேண்டும் சதாகாலஞ் சமாதியிலே நிற்கவேண்டும்
கோனான குருவருளைக் காணவேண்டும் காணாட்டால் காயுமில்லை பூவுமில்லை
வேனான பரஞ்சுடரை நிர்த்தம் நிர்த்தம் விரும்பியே பேரின்பங் காணவேண்டும்
பானான காயசித்தி யோகசித்தி பாங்கான குளிகையுள சித்துதானே

விளக்கவுரை :


1464. காணவே வண்டபகிரண்டமெல்லாம் கடிதான வடிமூலங்காணவேண்டும்
பூணவே பூரணத்தையறியவேண்டும் போக்கான வஸ்துவெல்லாங் காணவேண்டும்
தோணவே கழுத்திலே நிற்கவேண்டும் சூட்சமு னாடெல்லா மறியவேண்டும்
வேணவே வம்பரத்தை நாடவேண்டும் வெட்டவெளி சின்மயத்தைக் கூடநன்றே

விளக்கவுரை :


1465. கூடவே மனந்தேறி நிற்கவேண்டும் குவலயத்தில் துரியம்விட்டு பிரியவேண்டும்
நாடவே நடுமையமேறல் வேண்டும் நாதாக்கள் கூத்தெல்லாங் காணவேண்டும்
தேடவே வாலைதனைக் காணவேண்டும் தெளியாத மூன்றெழுத்தைப் பற்றவேண்டும்
நீடவே சிதானந்த வறிவில்நின்று நிட்களமாய் மேலவரைப்போகநன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar