போகர் சப்தகாண்டம் 1456 - 1460 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1456 - 1460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1456. உண்மையாமின்னமொரு போக்குகேளு ஓகோகோவுலகுதனில் யார்தான்செய்வார்
கண்மையாம் ரிஷிமுனிவர் சித்தர்செய்வார் காசினியில் நூல்பார்த்தோர் செய்வார்கள்தான்
திண்மையாம் லிங்கமொரு பலமேவாங்கு தெளிவான வரப்பொடியுந் தாளகந்தான்
வண்மையா மிருதாரு சிங்கிதானு மணக்கமுடன் துருசுடனே காரமாமே

விளக்கவுரை :


1457. காரமாஞ்சாரமுடன் வீரந்தானும் கருவான பூநீறுஞ் சாம்பிராணிபூரமாம்
பூரமாஞ் சூடனுடன் மதியும்போடு புகழான சீனமுடன்கரியுப்பாகும்
தீரமா மித்தனையும் சரிநேரொக்க திகழவே குழிக்கல்லில் பொடித்துக்கொண்டு
சோரவே வறுவகைஜெயநீர்தன்னால் சூட்டியரை யெண்சாமம் புகலக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

1458. கேளேநீ மெழுகாலே குகைதான்செய்து கெட்டியாய் லிங்கமதையுள்ளே வைத்து
கோளேதான் வாராமல் சீலைசுற்றி கொப்பனவே ரவிதனிலே காயவைத்து
தாளேதான் வஜ்ஜிரமாஞ் சீலைசெய்து தாக்குடனே குழிவெட்டி வுமிதான்கொட்டி
மீளேதான் கரிநெருப்பைக் கொட்டியேதான் மிக்கான தீமூட்டி மாட்டிடாயே

விளக்கவுரை :


1459. மாட்டவே மூன்றுநாட் சென்றபின்பு மயங்கியே திரியாதே மைந்தாகேளு
வாட்டமுடன் தீயாறிதானிருக்கும் வளமான லிங்கமது யிருகிப்போகும்
தாட்டிகமாய் நீயெடுத்துப் பார்க்கும்போது சாங்கமாய் லிங்கமது வுருக்குபோலாம்
நாட்டமுடன் றானெடுத்து மெழுகுசெய்ய நலமான போக்குவழி சொல்லக்கேளே

விளக்கவுரை :


1460. சொல்லவே வராகத்தின் நெய்யோடொக்க சுறுக்கான வெருக்கன்பால் சமனதாக
வெல்லவே லிங்கமதையோட்டிலிட்டு வேகமுடன் சுருக்கிடவே மெழுகுமாகும்
புல்லவே மெழுகதனை வெள்ளிசெம்பில் புகழாகத்தான் கொடுக்க மெழுகுமாகும்
மெல்லவே வாறடித்து புடத்தைப்போடு மேலான பொன்னதுவு மாகுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar