1451. பாண்மையாம் யாகநிலை
தவத்தில்நின்று பாங்குபெற சின்மயத்தை பணிந்துபோற்றி
கான்மையாம் காலாங்கி
தனைநினைத்து கருத்துடனே எப்போதும் கடாட்சிக்கத்தான்
மேன்மையுடன் மனோன்மணியை
மனதிலெண்ணி மிக்கான சுடரொளியைக் காணவென்று
வாண்மைபெற பராபரியை
நிலையாராய்ந்து வாகுடனே சுருதிநிலை நின்றுபோற்றே
விளக்கவுரை :
1452. போற்றவே வஷ்டாங்கந்
தன்னிற்சென்று புகழாக மேல்வரை மனதிலுண்ணி
ஆற்றவே வம்பரத்தை மேலேநோக்கி
ஆராதாரச்சுடலை அருவித்தாண்டி
சீற்றவே
லாகிரியிலணைத்துந்தள்ளி சித்தாந்த பாசமதையுள்ளடக்கி
நாற்றமென்னுந் துருத்திநிலை
சமாதியாக்கி நடுவுநிலைபற்றியே தானமர்ந்துபோற்றே
விளக்கவுரை :
[ads-post]
1453. அமர்ந்துமே லிங்கமென்ற
தாரந்தானும் அப்பனே பூரமுடன் வீரந்தானும்
சுமர்ந்துமே கெந்தியது
துருசுதானும் சுடரான பாஷாண மிருதார்சிங்கு
தமர்ந்துமே சூதமுடன்
துத்தந்தானும் தாக்கான வெடியுப்பு சீனந்தானும்
புமர்ந்துவே கெவுரியுடன்
சாரந்தானும் பூட்டினார் சமயெடையாய் பூட்டினாரே
விளக்கவுரை :
1454. பூட்டவே வறுவகை
ஜெயநிர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நீட்டமுடன் சிமில்தனிலே
பதனம்பண்ணு நிலையான வெள்ளிதனி லிரண்டுக்கொன்று
தாட்டிகமாய்த் தகடடித்துப்
பூசிப்பின்பு சாங்கமாய் காவிக்குள் புடத்தைப்போடு
வாட்டமுடன் புடமாறி
யெடுத்துப்பாரு மாசற்ற வெள்ளியது பழுக்கும்பாரே
விளக்கவுரை :
1455. பாரப்பா வெள்ளியது
பழுத்துமிக்க பாங்கான மாற்றதுவு மாறதாகும்
சீரப்பா வெள்ளியிடை
யிரண்டுக்கொன்று சிறப்பாகத் தங்கமது வொன்றுசேரு
நாரப்பா நயப்புடனே
வேதிக்கும்பார் நயமான பசுமையது சொல்லப்போமோ
கூரப்பா சிடிகையிது
வேதைமார்க்கம் கூறினேன் போகரிஷி உண்மைதானே
விளக்கவுரை :

