போகர் சப்தகாண்டம் 1551 - 1555 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1551 - 1555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1551. பூட்டினே னின்னமொரு கருமானங்கேள் புகழான ரத்தமென்ற பாளந்தானும்
மூட்டினேன் கார்போக வரிசிதானும் முக்கியமாம் வாலுழுவை யரிசிதானும்
தாட்டிகமாம் நீலமென்ற கூகைநீறும் தாக்கான பன்னீரா லரைத்துமைந்தா
நீட்டமுடன் பாண்டத்தில் லிடித்துப்போடு நேர்ப்பாக பூமிதனில் புதைத்திடாயே

விளக்கவுரை :


1552. புதைத்தவுடன் நீரெல்லாம் சுண்டவேதான் பொங்கமுடன் கருநிறமாயிருக்கும்பாரு
சிதைத்துமே நாசிதனில் முகந்திட்டாக்கால் திக்காடுஞ் சுவாசமது திணறிக்காட்டும்
பதைத்துமே மேனியது சிலிர்ப்புகாணும் படுஞ்சுலுக்கு கஸ்தூரி சொல்லப்போமோ
மிதத்துடனே மருந்துகளில் சேர்க்கவேண்டும் மிக்கான போகருட வைப்புதானே

விளக்கவுரை :

[ads-post]

1553. வைப்பான மின்னமொரு மார்க்கங்கேளு மகத்தான கமலமுனி சொன்னமார்க்கம்
வைப்பான காசியென்ற கட்டிதானும் வாகான கருவாயின்பட்டைதானும்
வைப்பான வவிரியுட சார்தான்கூட்டி வளமான வொட்டகத்தின் வுதிரந்தானும்
வைப்பான சரக்குடனே வுதிரவேங்கை வளமுடனே தான்சேர்த்து வரைத்திடாயே

விளக்கவுரை :


1554. அரைக்கவே பன்னீராலரைக்கவேண்டும் அப்பனே சாடிதனில் பொதியவேண்டும்
திரைக்கவே பூமிதனில் புதைக்கவேண்டும் திகழான மண்டலந்தான் சென்றபின்பு
நிறைக்கவே குழிதோண்டியெடுத்துப்பாரு யென்மகனே கஸ்தூரி யென்னசொல்வேன்
பரைக்கவே ராசரிடம் சென்றுமேதான் பாங்குடனே வெற்றியது பெறலாம்பாரே

விளக்கவுரை :


1555. பாரேதான் வயமதுவும் பலம்பத்தாகும் பாங்கான தாளகமும் பலமைந்தாகும்
சீரேதான் யெரிகாலான்பாலாலாட்டி சிறப்புடனே வெண்காரம் பொரித்துப்போடு
கூரேதான் வச்சிரமாங் குகைதனில்வைத்து குமுறவே மேல்மூடிசீலைசெய்து
நேரேதான் சரவுலையில் வைத்துவூது நேர்ப்பான களங்கமது சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar