போகர் சப்தகாண்டம் 1556 - 1560 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1556 - 1560 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1556. சொல்லவே சாரமென்ற ஜெயநீர்தன்னால் சுறுக்குடனே தானுருக்கி சாய்ப்பாயானால்
கொல்லவே வயமதுவுஞ்சவுடுநீங்கி குணமாகும் களிம்பூர லற்றுப்போகும் 
வெல்லவே செந்தூரஞ்செய்தாயானால் மிக்கான காயத்துக்குறுதியாகும்
புல்லவே தேனதிலே யுண்டுபாரு புகழான தாதுக்களும் வலுத்துப்போச்சே

விளக்கவுரை :


1557. போச்சென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் லிங்கமது பலந்தானொன்று
போச்சொன்று மில்லாமல் பீங்கானுக்குள் பேரானபாலதனை விட்டுமைந்தா
நீச்சென்ற பாலதனால் சுறுக்குத்தாக்கு நெடிதான லிங்கமது சுத்தியாச்சு
மாச்சென்ற பழரசமும் நாழியாகும் மகத்தான தேனதுவும் நாழியாமே

விளக்கவுரை :

[ads-post]

1558. நாழியாம் மேனிச்சார் நாழியாகும் நலமான கையான்சாற் நாழியாகும்
தாழியாம் இலைச்சாறு நாழியாகும் தாக்கான வாதளையின்சாற் நாழியாகும்
கோழியா மிலைமூலிச்சாற் நாழி கொடிதான முசுக்கையுட சாறுநாழி
வாழியாம் படாமூலிச்சாறுநஅழி வளமான கழற்சிக்காய் நாழியாமே

விளக்கவுரை :


1559. ஆமேதான் பூலாவுஞ்சாறுநாழி அப்பனே வாதண்டைச்சாறு நாழி
வேமேதான் கொடிக்கள்ளிச் சாறுநாழி வாரைவான தும்பைமலர்ச்சாறுநாழி
காமேதான் பூப்பனையின் சாறுநாழி கருவான விளாவிலையுஞ்சாறு நாழி
போமேதான் பூப்பனையின் சாறுநாழி பொலிவான கஞ்சாவின் சாறுமாமே

விளக்கவுரை :


1560. நாறான குமரிச்சார் நாழியாகுஞ் சதாவேரி மூலியது சாறுநாழி
வேறான முசுட்டையுட சாறுநாழி மிக்கான கவுதும்பை சாறுநாழி
கூறான மத்தங்காய் சாறுநாழி குணமான சிவதைவேர் சாறுநாழி
பாறான தேட்கொக்கு சாறுநாழி பாங்கான முருக்கன்சாற் நாழிகூட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar