1561. கூட்டவே முடக்கொத்தான்
சாறுநாழி குறிப்பான தக்காளிசாறுநாழி
மாட்டவே பழுபாகல் சாறுநாழி
மதிப்பான குவளைச்சாறு நாழியாகும்
நீட்டவே
திருக்கள்ளிச்சாறுநாழி நெடிதான பாலையுடச்சாறுநாழி
மூட்டவே
பெருந்தாளிச்சாறுநாழி முனையான பொன்முசுட்டைச் சார்தான்சேரே
விளக்கவுரை :
1562. சேர்க்கவே விவையெல்லா
மொன்றாய்ச் சேர்த்து சிறப்பாக லிங்கத்திற் சுறுக்குதாக்கு
ஏர்க்கவே லிங்கமது
கட்டிப்போகும் எழிலான லிங்கமது வுறுக்குபோலாம்
பார்க்கவே
வெட்டுருக்குபோலேகாணும் பாங்கான லிங்கமது சொல்லப்போமோ
தீர்க்கமுடன் கவசமது
சொல்வேன்பாரு தெளிவான சரக்குகளுஞ் சாற்றக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
1563. கேளேநீ வெடியுப்பு
பலமொன்றாகும் கெடிதான வந்துப்பு பலமொன்றாகும்
சூளேதான் பூநீறு
பலமொன்றாகும் சுடரான துருசதுவும் பலமொன்றாகும்
வீளேதான் படிகாரம்
பலமொன்றாகும் மிக்கான காரமது பலமொன்றாகும்
பாளேதான் கெந்தியது
பலமொன்றாகும் பருவமாம் வளையலுப்பு பலமொன்றாமே
விளக்கவுரை :
1564. ஒன்றான வுப்புடனே
சாரமொன்றாம் ஒளிவான தாளகமும் பலமொன்றாகும்
குன்றான வீரமது பலமொன்றாகும்
குறிப்பான பூரமது பலமொன்றாகும்
நன்றான குணங்கியது
பலமொன்றாகும் நலமான தொட்டியது பலமொன்றாகும்
அன்றான வறுவகை
ஜெயநீர்தன்னால் அப்பனே நாற்சாம மரைத்திடாயே
விளக்கவுரை :
1565. அரைக்கவே மைபோலே வெண்ணையாகும் அப்பனே மெழுகதனையெடுத்துக்கொண்டு
திறைக்கவே தசபங்காய்
செய்துகொண்டு தெளிவான லிங்கத்திற் கங்கிபூட்டி
மரைக்கவே சுண்ணாம்பு
சீலைசுற்றி மார்க்கமுடன் ரவிதனிலே காயவைத்து
விரைக்கவே மணல்மறைவிற்
புடத்தைப்போடு வீரமுடன் லிங்கமது கட்டிப்போமே
விளக்கவுரை :

