போகர் சப்தகாண்டம் 1566 - 1570 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1566 - 1570 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1566. போமேதா னிப்படியே புடமேபத்து பொங்கமுடன் மாறாமல் புடத்தைப்போடு
வேமேதான் லிங்கமது கவசம்நீக்கி மேன்மையுடன் தான்பார்க்க வுருக்குமாகும்
சாமேதான் லிங்கமது யெடுத்து மைந்தா சாங்கமுடன் தங்கமது பத்துக்கொன்று
நாமேதான் சொன்னபடி தங்கரேக்கை நயமாக லிங்கத்திற் கங்கிசுத்தே
விளக்கவுரை :


1567. சுத்தியே குன்றிமணி பசையினாலே சூட்சமுடன் விராலியிட தயிலங்கேளு
பத்தியுடன் பீங்கானுக்குள்ளே வைத்து பாலகனே எருக்கன்பால் சுருக்குதாக்கு
துத்தியுடன் தீநெருப்பை மூட்டிக்கொண்டு சுடரொளியின் மேல்வைத்து வாட்டுமார்க்கம்
புத்தியுடன் விராலியிட தயிலத்தாலே பொங்கமுடன் சுருக்கிடவே மெழுகுமாமே

விளக்கவுரை :

[ads-post]

1568. மெழுகான பதம்பார்த்து மைந்தாகேளு மேன்மையுடன் யெருக்கன்பால் சுருக்குதாக்கு
நழுவான வராகத்தின் நெய்யால்மைந்தா நலமுடனே நாற்சாமம் சுறுக்குதாக்கு
வழுகாது மெழுகாகும் சிவத்துக்கொப்பாம் வாகான மெழுகெடுத்து பதனம்பண்ணு
தொழுகாத வயிரவரை பூசித்தேதான் தோற்றமுடன் கொடுக்கும் விதிசொல்லுவேணே

விளக்கவுரை :


1569. சொல்லவே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று சூட்சமுடன் தானுருக்கி மாற்றைப்பாரு
வெல்லவே மாற்றதுவு மெட்டதாகும் மேன்மைபெற செப்பிலே கொடுத்துப்பாரு
கொல்லவே செம்பினிட வூறல்நீங்கி குருமருந்தால் செம்பினிலே நூற்றுக்கொன்று
புல்லவே கொடுத்திடுவாய் மாற்றோ பத்து குறையாது வித்தையிது அதீதந்தானே

விளக்கவுரை :


1570. தானான சித்தர்முனி ரிஷிகள்தாமும் தயவுடனே செய்யமிந்த வேதையாகும்
கோனான குருவருளைப் பெறவேவேண்டும் பெறாவிட்டால் வாதமது வாய்க்குமோசொல்
தேனான மனெனொன்மணியை பணியவேண்டும் பணியாட்டால் வாதசித்தி கிடைக்குமோசொல்
பானான பராபரியைத் துதிக்கவேண்டும் துதியாட்டால் விட்டகுறை லபியாதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar